கர்த்தருடைய இரண்டாம் வருகை THE SECOND COMING OF THE LORD 57-04-17 Jeffersonville Indiana U.S.A. 1. எங்களுடைய பரலோகப் பிதாவே, நாங்கள் இன்றிரவு உம்மண்டை அந்த அழகான கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் வருகையில், நாங்கள் இந்தப் பரிசுத்த நாட்களை அணுகுகையில், இது பூமியின் மேல் உண்டான அந்த மகத்தான நேரத்தையே சுட்டிக்காண்பிக்கிறது என்பதை அறிந்து, நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். அப்பொழுதே பரிதாபமாக இழக்கப் பட்டப் பாவிகள் விடுதலையடையும்படியான எல்லாவற்றிற்கும் போதுமான பலியானது செலுத்தப்பட்டது. என்றோ ஒரு நாள் அவர் மீண்டும் வருவார் என்ற இந்த மகத்தான நம்பிக்கையை நாங்கள் இன்றிரவு எங்களுடைய இருதயங்களுக்குள் கொண்டிருக்கிறோம். இன்றிரவு வாசலினூடாக வந்து, இந்தப் பிரசங்கபீடத்தை அணுகும்போது, ''நாம் ஒரு களிப்பான வீடு திரும்பும் வாரத்தை உடையவர்களாயிருப்போம், முதல் பத்தாயிரம் வருடங்கள்" என்ற இந்தப் பழைய பாடலைக் கேட்கும்போது, அது இங்கே கூடாரத்தில் மகத்தான உலக ளாவிய எழுப்புதல் துவங்கினதற்கு முன்னர் நாம் சந்தித்தபோது, அநேக ஆண்டுகளுக்கு முன்னர் உண்டாயிருந்த நினைவுகளையே திரும்பக் கொண்டு வருகிறது. பிதாவாகிய தேவனே, நாங்கள் அந்த நினைவுகளை அப்படியே நினைவில் கொண்டுள்ளோம். பாவிகளை இரக்கத் திற்காக அழைப்பதும், பின்வாங்கிப் போனவர்கள் மீண்டும் தேவனோடு காரியங்களை சரிப்படுத்துகிற இன்னொரு பண்டைய மாதிரியான எழுப்புதல்களின் துவக்கத்திற்கு நாங்கள் இன்றிரவு திரும்பிவருவது எங்களுடைய ஆத்துமாக்களில் நன்மையாகவே தென்படுகிறது. பரிசுத்த ஆவியானவரே கூட்டத்தின் முக்கிய நபராயிருந்து, கட்டுப்பாட்டையும், நடைமுறை ஒழுங்குகளையும் கடைப்பிடிக்கும் பொறுப்பேற்று, வார்த்தையினூடாக ஜீவ அப்பத்தை எங்களுக்கு கொண்டு வருகிறார். அவர் இந்த எழுப்புதலில் ஒவ்வொரு இரவும் தொடர்ந்து எங்களுக்கு உதவி செய்து, வியாதியஸ்தரை சுகப் படுத்தி, தேவையுள்ளோருக்கு உதவி செய்து, ஒவ்வொரு விசுவாசியையும் பரிசுத்தப்படுத்தி, நாங்கள் படும் இந்த எல்லா பிரயாசங்களிலிருந்து மகிமையை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். பிதாவாகிய தேவனே நாங்கள் இதை அவருடைய நாமத்தின் கனத்திற்கும், மகிமைக்கும் மாத்திரமே வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 2. இது பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர் நான் பண்ணின் வாக்குறுதியின் நிறைவேறுதலாய் உள்ளது. நீண்ட காலமாகவே அதை தட்டிக்கழித்து வந்தோம். ஆனால் ஒரு எழுப்புதலுக்காக கூடாரத்திற்கு மீண்டும் திரும்பி வந்துள்ளோம். இப்பொழுது நம்முடைய சிறு கூடாரமானது ஒரு எழுப்புதலுக்கு போதுமான அறையைக் கொண்டிருக்கவில்லை. ஆனாலும் நாம் இங்கே அப்படியே நெருக்கிக் கொண்டுள்ளோம். எனவே தேவனுடைய மகிமைக்காக அடுத்த சில இரவுகளும் நம்மால் முடிந்த அளவு அவ்வாறே செய்வோம். 3. சபையில் ஒரு கூட்டத்தை நடத்த நான் விரும்புகிறேன். நாம் கூட்டங்களை அநேக இடங்களில், விளையாட்டு மைதானங்களில், வெளிப்புறங்களில், அரங்குகளில் நடத்துகிறோம். ஆனால் நீங்கள் அதை சபையில் நடத்தும்போது, அதில் வித்தியாசமான ஏதோ ஒரு காரியம் உண்டு. நீங்கள் சபையில் இருக்கும்போது அது இனிமையானதாகவும், மிக நெருக்கமான ஐக்கியமாயும் இருப்பதுபோன்று தென்படுகிறது. வெளியே அந்த அரங்கங்களில், உலகப்பிரகாரமான இடங்களில் நாம் அங்கிருக்கும்.......இருக்கும் சிலாக்கியத்தை பெற்றுள்ளதற்கு நன்றியுள்ள வர்களாயிருக்கிறோம். [ஒலி நாடாவில் காலி இடம் - ஆசி.) அந்த எழுப்புதல் எப்போதும் துவங்கி நடத்தும் முன்னர் நீங்கள் அதை தகர்க்க வேண்டியது போல காணப்படும். ஆனால் நீங்கள் சபைக்குள்ளாக வரும்போது, அது தேவன் வாசம்பண்ணுகிற ஒரு ஸ்தலமாய் உள்ளது. அது ஒரு கூட்டத்தை நடத்த அவருடைய வீட்டிற்கு வருகிறதாயுள்ளது. 4. இங்கே கூடாரத்தில் என்னுடைய ஊழியத்தின் முடிவில் அநேக ஆண்டுகளுக்கு முன்னர் நான் கண்ட அநேக பழைய முகங்களை இன்றிரவு காண்பதற்கு இப்பொழுது நாங்கள் மகிழ்ச்சி யடைகிறோம். பாருங்கள், சகோதரன் கிரஹாம் உள்ளே இருக்கிறார் மற்றும் சகோதரன் க்ரூட்ஸ், சகோதரி ஏன்ஜி, சகோதரி கிரீட்டி இங்கே உள்ளனர். சகோதரன் காக்ஸ் மற்றும் சகோதரி காக்ஸ், ஓ, என்னே, உங்களில் அநேகர், சகோதரி ஸ்பென்சர் மற்றும் சகோதரன் ஸ்பென்சர், நீங்கள் எல்லோருமே இங்கே உள்ளே இருக்கிறீர்கள். நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறோம். தாயார் மற்றும் திருமதி ஸ்லாட்டர், சகோதரனும் இங்கே இருக்கிறார். நீங்கள் இன்னமும் அப்படியே பெரிய கூட்டமாகவே இருக்கிறீர்கள். எழுப்புதல் துவங்கின நேரத்தி லிருந்து இங்கு இருக்கிறவர்கள் எத்தனை பேர்? நான் எழுப்புதலுக்கு பிறகு வெளியே சென்றதையே பொருட்படுத்தி கூறுகிறேன். நாங்கள் உங்களுடைய கரங்களைக் காணட்டும். இன்றிரவு சபை முழுவதுமே அப்படியே கரங்களையே காண்கிறேன். அது மிகவும் அருமையாயிருக்கிறது. 5. இப்பொழுது நாம் ....... எழுப்புதல் பரிசுத்த ஆவியினால் மாத்திரமே உண்டாகிறது என்பதை அறிந்துள்ளோம். அவரே எழுப்புதலைக் கொண்டு வருகிறவராயிருக்கிறார். நாமாகவே அதைச் செய்ய இயலாது. நாம் அந்தப் பிரயாசத்தை மாத்திரமே உண்டுபண்ண இயலும்; ஆனால் தேவன் அந்தப் பிரயாசத்தை ஆசீர்வதிக்க வேண்டும். எனவே அவர் ஆசீர்வதிப்பார் என்று நாம் நம்புகிறோம். 6. நான் வீதியிலே வரும்போது, என் மனைவியினிடத்தில் கூறிக்கொண்டிருந்தேன்... இன்றிரவு இரவு ஆகாரத்தைப் புசிக்கக் கூட எனக்கு சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. அந்தளவிற்கு அவசரமான அளவுக்கு மீறின் மிகவும் முக்கிய பணியிருந்தது. நேற்று காலை நான் எழுந்தது முதற்கொண்டு பிற்பகல் இரண்டு மணிக்கு முன்பு நான் சட்டை அணிந்து கொள்ளும் வரை அவ்வாறு இருந்தது. அதுவும் தொலைபேசி அழைப்புகள் மட்டுமே அவ்வளவு நேரம் எடுத்துக் கொண்டன. அதன் பிறகு லூயிவில்லில் உள்ள மருத்துவர் சாம் அடயர் அவர்களுக்காக அவரச அழைப்பை நான் பெற்றபோது, அது சரியாக இரண்டு மணியாய் இருந்தது. அப்பொழுது ... அதன் பின்னரும் மற்ற அநேக அழைப்புகளும் மற்றும் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களிட மிருந்தும் அழைப்புகள் வந்தன. அப்பொழுது மருத்துவமனையிலிருந்து வந்த ஒருவர், ''நல்லது, நாங்கள் அடிக்கடி காத்திருக்கிறோம். எனவே காத்திருக்கிற இந்தத் துன்பத்தைவிட நாம் நரகத்திற்குச் செல்லும்போது இன்னும் மோசமாக இருக்குமா?" என்று கேட்டார். எல்லா விடத்திலிருந்தும் அலறலும், கூக்குரலுமான அழைப்புகளே நூற்றுக்கணக்கான ஊழியர்களிடமிருந்து வருகின்றன. 7. இந்த உலகம் எப்போதும் அறிந்திராத மகத்தான வேளைகள் ஒன்றில், மகத்தான நாட்கள் ஒன்றில் நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம் என்றே நான் உங்களுக்கு சொல்லுகிறேன். ஜனங்களுடைய இருதயங்களில் தேவனைக் குறித்து அதிகப் பசி கொண்டிருப்பதைக் காண நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். 8. எனவே இது தேவனுடைய சித்தத்தில் இருக்கும்படியான ஜெபிக்கும் பொறுப்பை இப்பொழுது நான் என்னுடைய இருதயத்தில் ஏற்றுக்கொண்டுள்ளேன். அங்கே பின்னால் வழியிலே சில ஜனங்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். நம்மிடத்தில் ஒரு இருக்கை, ஒரு சிறு நீள்வடிவ மரப்பலகை இருக்கை இருக்குமா .... என்று அறிய விரும்புகிறேன். ஆயினும் அந்தச் சிறிய நீள்வடிவ மரப்பலகை இருக்கையை எப்படியாவது இங்கு அமர ஏற்பாடு செய்து கொடுக்க முடியாதா என்று அறிய விரும்புகிறேன். சில பெண்மணிகள் ....... இல்லை ஏதோ ஒன்று அங்கே பின்னால் உள்ளது. அதை ஒருக்கால் நம்மால் முடிந்தால் ....... இங்கு அவர்களில் சிலர் அதாவது ஏதோ ஒன்றை சற்று மேலே சென்று இங்கு அந்த நீள்வடிவ மரப்பலகை இருக்கையை இங்கே முன்னால் கொண்டுவர இயலுமா என்பதை அறிய விரும்புகிறேன். ஒருக்கால் .... சகோதரன் பென் (Ben) நாங்கள் உங்களை உள்ளே காண்பதற்கு மகிழ்ச்சியடைகிறோம். கடைசி முறையாக நான் ஒரு சில வாரங்களுக்கு முன்னர் கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்னான்டோ (San Fernando Valley) என்ற இடத்தில் இருந்தபோது உங்களைக் கண்டேன். நீங்கள் இங்கே மேலே வரவேண்டும் என்று நாட்டங் கொள்வீர்களேயானால், உங்களைத்தான், பின்னால் நின்று கொண்டிருக்கிற சபையோராகிய உங்களைத்தான் கூறுகிறேன். இப்பொழுது நீங்கள் இங்கே மேலே வரவேண்டுமென்றால், நேராக முன்னால் வாருங்கள். இங்கே மேடையின் மேல் ஒரு கூடுதல் இருக்கையும், கொஞ்சம் கூடுதலான இடங்களும் உள்ளன. எனவே அவர்கள் பீடத்தின் மேல் அழைத்துச் செல்லப்படு வார்கள். எங்களால் முடிந்தளவு உங்களை செளகரியமாக இருக்கும்படி செய்யவே விரும்புகிறோம். 9. தேவனுடைய ஒத்தாசையினால் நான் தானாகவே ஒரு வாக்குறுதியை செய்து கொண்டேன் என்று நான் என் மனைவி யினிடத்தில் கூறினேன். அது நான் இனி நீண்ட ஆராதனை களை நடத்தும்படியான எண்ணம் கொண்டிராமல், கர்த்தருக்கு சித்தமானால் முப்பது நிமிடங்களே பேச வேண்டும் என்பதாகும். எனவே அது ஒரு அற்புதமானதாக இருக்கும். ஏனென்றால், என்னால் - என்னால் மிக சீக்கிரமாக துவங்கமுடியவில்லை. ஆனாலும் நான் - நான் துவங்க முயற்சித்தேன். அதன் காரணமாக .... அதன் பின்னர் நாங்கள் வருகின்ற நேரத்தில் இது, நாளை இரவு ...... இன்றிரவு, என்னுடைய பொருள்; கர்த்தருடைய இரண்டாம் வருகை என்பதாகும். 10. நாளை இரவு இராபோஜன இரவாக இருக்கிறது. எனவே நான் பழைய ஏற்பாட்டு பகுதியில் உள்ள ஒரு கோணத்திலிருந்து இராஜபோஜனத்தைக் குறித்துப் பேச விரும்புகிறேன். நாம்........ நாளை இரவு ஒழுங்குபடுத்தப்பட்ட இராபோஜன இரவாயிருக்கிறது. ஏனென்றால் அது நம்முடைய கர்த்தர் காட்டிக்கொடுக்கப்பட்ட இரவாயுள்ளது. எனவே அது ஒழுங்கு படுத்தப்பட்ட இராபோஜன இரவாயிருந்தது. நாளை இரவு ஆராதனைகளுக்குப் பிறகு, வழக்கமான பிரசங்க ஆரா தனைக்குப் பிறகு, அதன் பின்னரே நமக்கு இராபோஜனம் இருக்கும். ஒவ்வொருவரும் எங்களோடு வந்து, நம்முடைய கர்த்தராகிய இயேசு நமக்கு விட்டுச் சென்ற இந்த மகிமையான நிபந்தனையில் பங்கு பெறும்படி அழைக்கப்படுகிறீர்கள். 11. அதன் பின்னர் அதற்கு அடுத்த நாள் இரவு, கர்த்தருக்குச் சித்தமானால், சிலுவையிலறைந்த இரவாயிருக்கிறபடியால், சிலுவையிலறைதல் என்பதைக் குறித்து நீங்கள் வானொலியில் கேட்கவுள்ளதைப் பார்க்கிலும் சற்று வித்தியாச மான கோணத்திலிருந்து எடுத்துப் பேச விரும்புகிறேன். அதன் பின்னர் சனிக்கிழமை இரவு கல்லறையிலிடுதல் என்பதைக் குறித்து பேசவுள்ளேன். 12. பின்னர் ஞாயிறு காலையில் ஆறு மணிக்கு ஒரு சூரியோதய ஆராதனை உண்டு. அதன் பின்னர் அவர்களில் யாராவது ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டுமானால், பத்து மணிக்கு ஞானஸ்நான ஆராதனை உண்டு. பின்னர் ஈஸ்டர் காலை செய்தி அளிக்கப்படும். 13. கர்த்தருக்குச் சித்தமானால் ஞாயிறு இரவு நாம் உயிர்த் தெழுதலின் அத்தாட்சி என்ற ஒரு சிறிய செய்தியையும் மற்றும் ஒரு சுகமளிக்கும் ஆராதனையையும் எதிர்பார்த்துக் கொண்டி ருக்கிறோம். வருகின்ற இந்த ஞாயிறு இரவு நாம் வெளியே கூட்டங்களில், வழக்கமாக நடத்தும் கூட்டங்களில் நடைபெறும் சுகமளிக்கும் ஆராதனைகளைப் போன்ற ஒரு ஆராதனை இருக்கும். நீங்கள் அதை ஒருபோதும் கண்டிராதவர்களாயிருந் தால், உங்களுடைய நண்பர்கள் உயிர்த்தெழுந்த இயேசுவின் அத்தாட்சியை ஒருபோதும் கண்கூடாகக் காணாதவர்களாயிருந் தால், அப்பொழுது அவர் இங்கே பூமியின் மேல் இருந்தபோது அவர் செய்த அதே காரியங்களைச் செய்ய அவர் கடந்த வருடங்களில் கூட்டத்தில் பிரசன்னமானது போன்றே இங்கும் பிரசன்னமாகி அதைச் செய்வார் என்று நான் நம்புகிறேன். நாம்......வருகின்ற, வந்து கொண்டிருக்கின்ற அந்த நேரத்திற்கு எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறோம். 14. கூடுமானால் உங்களை அதற்கு சரியான விதத்தில், செளகரியமான முறையில் ஆயத்தம் செய்து கொள்ளுங்கள். நாளை இரவு நம்மால் வெளியே எங்கிருந்தாவது சில நாற்காலிகளைக் கொண்டுவர இயலுமா என்று அறிய விரும்புகிறேன். ஒருக்கால் அங்கே உள்ள சவ அடக்க நிலையத்திலிருந்தோ (Funeral Parlor) அல்லது வேறெங்கிருந்தாவது நாம் சில கூடுதல் இருக்கைகளைக் கொண்டு வந்து ஓரங்களில் சுற்றிப்போட்டால் நலமாயிருக்கும். நாங்கள் கூடுமான வரை ஒவ்வொருவரையும் சௌகரியமாக அமரச் செய்ய விரும்புகிறோம். 15. எத்தனை பேர் உங்களுக்குள்ள எல்லாவற்றோடும் கர்த்தரை நேசிக்கிறீர்கள்? இப்பொழுது நாம் நம்முடைய பாச உணர்வுகளைக் கிறிஸ்துவின் பக்கமாக வைத்து அப்படியே நோக்கிப் பார்ப்போமாக. நாம் இங்கே கோட்பாடுகளுக்காக இல்லை. நாம் இங்கே கர்த்தரை ஆராதிக்கவே உள்ளோம். நாம் இங்கே எல்லாவிதமான கொள்கைகளையும், நிறங்களையும் மற்றும் எல்லாவிதமானவர்களையும் அழைக்கவே இங்கு இருக்கிறோம். அதனால் இங்கு எந்த ஒரு காரியமுமில்லை. நாம் இங்குக் கர்த்தரை ஆராதிக்கும்படியாகவே உள்ளே வருகிறோம். எனவே ஆராதனை துவங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் பண்டைய பாணியில் பாடல்கள் பாடப்படும். இப்பொழுது நாளை இரவு கூடுமானால் இன்றிரவைப் போன்றே நான் சரியாக எட்டு மணிக்கு துவங்க முயற்சிக்கப்போகிறேன். அதாவது நாளை இரவு நாம் திரும்பி வரும்படி நாங்கள் முடிந்த அளவு துரிதமாக அனுப்ப உள்ளோம். 16. இப்பொழுதும் ஒவ்வொருவரும் வரவேற்கப்படுகிறீர்கள். நம்முடைய வருகையாளர்களாகிய நீங்கள் உள்ளே ஐக்கியங் கொள்ளும்படி வர அதிகமாகவே வரவேற்கப்படுகிறீர்கள். ஆராதனை முடிவுற்றவுடனே, இங்கே வந்திருக்கிற சபையின் ஜனங்களாகிய நீங்கள் கூடுமானவரை ஒவ்வொருவருடைய கரத்தையும் குலுக்கப் பாருங்கள். அப்படியே......இப்பொழுது தடைகள் தகர்க்கப்பட்ட ஓர் அற்புதமான நேரம் உண்டாயிருக் கட்டும். நம்முடைய கர்த்தர் என்ன செய்வார் என்பதை நீங்கள் அறியீர்கள். இது ஈஸ்டர் நேரமாய் இருக்கிறது. எனவே நாம் மகத்தான காரியங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். 17. இப்பொழுது நான் ஆசீர்வதிக்கப்பட்ட வார்த்தையில், ஒரு-ஒரு வசனத்தை அல்லது ஒரு வரியை அல்லது இரண்டு வரிகளை பரி. லூக்காவினுடைய சுவிசேஷம் 15ம் அதிகாரம் 8ம் வசனத்திலிருந்து வாசிக்க விரும்புகிறேன். அன்றியும், ஒரு ஸ்திரீ பத்து வெள்ளிக்காசை உடையவளாயிருந்து, அதில் ஒரு வெள்ளிக்காசு காணாமற்போனால், விளக்கைக் கொளுத்தி, வீட்டைப் பெருக்கி, அதைக் கண்டு பிடிக்கிறவரைக்கும் ஜாக்கிரதையாய்த் தேடாமலிருப்பாளோ? கண்டுபிடித்த பின்பு, தன் சிநேகிதிகளையும் அயல்வீட்டுக் காரிகளையும்கூட வரவழைத்து: காணாமற்போன வெள்ளிக் காசைக் கண்டுபிடித்தேன், என்னோடுகூடச் சந்தோஷப் படுங்கள் என்பாள் அல்லவா? 18. இப்பொழுது அது கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு மிகவும் வினோதமான ஒரு வேதவாக்கியம் போன்று தென்படலாம். ஆனால் அது கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்தே கூறிக்கொண்டிருக்கிறது. இங்கு நமக்கு முன்பாக நாம் எடுத்துள்ள இந்த மகத்தான பாடப்பொருள் முழு பரிசுத்த வேதாகமத்தில் உள்ள மிக முக்கியமான பொருள்களில் ஒன்றாக உள்ளது. கர்த்தராகிய இயேசுவின் வருகையைப் போல மிக முக்கியமானது வேறொன்றுமில்லை. ஏனென்றால் அவர் வரவில்லையென்றால், அப்பொழுது நாம் பொய் சாட்சிகளாக கண்டறியப்படுவோம். மரித்து கல்லறையில் உள்ள நம்முடையவர்களும் அழிந்து போவார்கள். இயேசுவானவர் இரண்டாம் முறையாகக் கண்ணுக்குப் புலப்படும்படியாக வரவில்லையென்றால், அப்பொழுது நமக்காக எந்த நம்பிக்கையுமே விட்டுவைக்கப்படவில்லை. முக்கியமாக இதில் ...... இந்தத் தெளிவான விளக்கத்தில் இரண்டாம் வருகையைக் குறித்த, இந்த மிகத் தெளிவான விளக்கத்தில் இது மிகவும் முக்கியமான தாக இருந்தது. அதாவது இப்பொழுது நாம் அணுகிக்கொண் டிருக்கிற இந்தப் பரிசுத்த வாரத்தில் இயேசுவானவர் முதல் முறையாக சிலுவையின் மிகுந்த பாடுகளில் அந்த வாரத்தை அணுகிக்கொண்டிருந்தபோது, அவர் தம்முடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதலைக் குறித்து மிக சொற்பமாகவே பேசினார். அவர் தம்முடைய மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் என்பதைக் குறித்து பேசினதைப் பார்க்கிலும் தம்முடைய இரண்டாம் வருகையைக் குறித்தே அதிகம் பேசினார். ஆகையால் இதைக் குறித்த இந்த தெளிவான காரியத்தில் இது ஒரு மிக முக்கிய பொருளாய் இருக்க வேண்டும். 19. பழைய ஏற்பாட்டில், கிறிஸ்துவின் முதலாம் வருகையைக் குறித்த வேத வாக்கியங்களைப் பார்க்கிலும், கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறித்த வேத வாக்கியங்களே பழைய ஏற்பாட்டில் அநேகங் காணப்படுகின்றன. இப்பொழுது பாவநிவாரணம் உண்டாக்கப்பட்ட பிறகு மானிட வர்க்கத்திற்கான ஒவ்வொரு காரியமும் கர்த்தருடைய இரண்டாம் வருகையின் பேரிலேயே முக்கியமானதாக அமைந்துள்ளன. 20. இப்பொழுது நாம் பல்வேறுபட்ட மார்க்கங்களை உடையவர்களாயிருக்கிறோம். நாம் பல்வேறுபட்ட உள்ளெண்ணங் களையும், பல்வேறுபட்ட வேத சாஸ்திரங்களையும் உடையவர்களா யிருக்கிறோம். ஆனால் நம்முடைய கிறிஸ்தவ மார்க்கமோ மரணம், அடக்கம், உயிர்த்தெழுதல் மற்றும் கர்த்தருடைய இரண்டாம் வருகை என்பதன் பேரிலேயே முக்கியமாக அமைந்துள்ளது. ஓ, இது ஒரு முக்கியமான கேள்வியாகும். நாம் இப்பொழுது இதை அணுகிக்கொண்டிருக்கையில், நாம் அவருடைய இரண்டாம் வருகையின் நிழலிலேயே ஜீவித்துக் கொண்டிருக் கிறோம் என்பதே என்னுடைய மிக உத்தமமான கருத்துகளாகும். வேதவாக்கிய விளக்கத்தின் மூலமாக நான் அதை என்னுடைய வழியில் பார்க்கும்பொழுது, சபைக்கு கர்த்தருடைய இரண்டாம் வருகையைத் தவிர வேறெந்த நம்பிக்கையுமே விட்டு வைக்கப்பட்டிருக்கவில்லை. உலகமானது முழுமையாகவே அதனுடைய முரட்டுத்தனமாக பெருங்குழப்பத்திற்குள்ளாக கட்டுப்பாட்டை மீறிச்சென்றுவிட்டது. உலகத்தில் மனிதனால் உண்டாக்கப்பட்ட ஒவ்வொரு ஸ்தாபனமும் அவ்வாறே உள்ளது. எனவே இராஜாக்கள் இனிமேல் தங்களுடைய பிரஜைகளைப் பிடித்து வைத்திருக்க முடியாது. சர்வாதிகாரிகளும் தங்களுடைய பிரஜைகளை இனிமேல் பிடித்து வைத்திருக்க முடியாது. ஜனநாயகமும் அதனுடைய பிரஜைகளை இனி பிடித்து வைத்திருக்க முடியாது. கர்த்தராகிய இயேசுவின் இரண்டாம் வருகையைத் தவிர வேறெந்த நம்பிக்கையுமே விடப்பட்டிருக்கவில்லை. 21. இப்பொழுது இது அவிசுவாசத்திற்கும், பாவிகளுக்கும் மிகவும் பயங்கரமான நேரங்களில் ஒன்றாக உள்ளது. அதை அவன் எப்பொழுதுமே சாட்சி பகர்ந்து வருகிறான். ஏனென்றால் ஆக்கினைத்தீர்ப்பின் நேரம் சமீபித்துள்ளது. ஆனால் இது விசுவாசிக்கு மிகவும் ஆசீர்வதிக்கப்பட்ட நேரமாய் உள்ளது. ஏனென்றால் அவனுடைய மீட்பு சமீபமாயுள்ளது. இன்றிரவு பூமியில் இரண்டு பிரிவினர் உள்ளனர். அது விசுவாசி மற்றும் அவிசுவாசி என்பதாகும். அதில் ஒரு பிரிவினரைக் கர்த்தர் ஏற்றுக் கொள்ள வருகிறார். மற்றொரு பிரிவினரையோ கர்த்தர் ஆக்கினைக்குட்படுத்தவே வருகிறார். அவருடைய வருகையில், அவருடைய பிரசன்னமாகுதலில் ஒருவர் ஆசீர்வதிக்கப்படுவர், மற்றொருவர் சபிக்கப்படுவர். 22. இது இப்படிப்பட்ட ஒரு முக்கியமான காரியமாய் இருக்கிறபடியால்.........மாலையிலே, சரியாகக் கூறினால் நம்முடைய சிறிய எழுப்புதலின் நேரத்தில் நாம் அதற்கு எவ்வளவு சமீபமாயிருக்கிறோம் என்பதைக் காண நாம் வேத வாக்கியங் களில் பயபக்தியோடு நோக்கிப் பார்க்க வேண்டும் என்பதை நான் சற்றுமுன் சிந்தித்துப் பார்த்தேன். நான் என்ன நேரம் என்பதை அறிந்து கொள்ள வேண்டுமானால், அப்பொழுது நான் என்னுடைய கடிகாரத்தை நோக்கிப் பார்ப்பேன். நாம் ஜீவித்துக் கொண்டிருக்கிற வாரத்தின் நாளையோ அல்லது வருடத்தின் மாதத்தையோ அறிந்து கொள்ள வேண்டுமானால், அப்பொழுது நான் நாள்காட்டியை நோக்கிப் பார்ப்பேன். நான் இந்த மகத்தான சம்பவத்தைக் குறித்த அணுகுமுறையை அறிந்து கொள்ள வேண்டுமானால், அப்பொழுது நான் தேவனுடைய வார்த்தையையே நோக்கிப் பார்ப்பேன். ஏனென்றால் அது இது சமீபமாயுள்ளது என்ற நேரத்தைச் சொல்லுகிறது. வேதம், "இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்துபார்த்து, உங்கள் தலை களை உயர்த்துங்கள்'' என்றுரைத்துள்ள து. காலம் சமீபமாயிருக்கிறது. 23. திவ்விய வாசகனாகிய யோவான் பத்மு தீவில் கர்த்தருடைய வருகையின் முன்காட்சியைக் கண்டபோது, அது அவனுக்கு அப்பேற்பட்ட ஒரு மகத்தான காரியமாயிருந்தது. அவன் அவிசுவாசியின் மேல் தங்கியிருந்த சாபங்களையும், விசுவாசியின் மேல் தங்கியிருந்த ஆசீர்வாதங்களையும் கண்டபோது, அவன், ''கர்த்தராகிய இயேசுவே, வாரும்" என்று கூச்சலிட்டான். அவன் எல்லாவற்றையும் கண்டிருந்த பிறகு, அவருடைய வருகைக்கு முன்னதான சம்பவங்களைக் கண்ட பிறகு அது அவனுடைய இருதயத்தை மெய் சிலிர்க்கச் செய்தது. எனவே, "கர்த்தராகிய இயேசுவே, வாரும்" என்று கூச்சலிட்டான். அவனுடைய பார்வையில் முழு சபை காலமும் கடந்து சென் றிருந்தபோது, அவன் ஒவ்வொரு காரியத்தையும் பெரிய அளவில் கண்டபோது, அது சம்பவிக்கும் விதமாகவே கண்டபோது, அப்பொழுது அவன், "கர்த்தராகிய இயேசுவே வாரும்" என்று கூச்சலிடுகிறான். கர்த்தருடைய வருகை சமீபத்தில் சேருகிறது என்பது ஒரு மகிமையான காரியமாக இருக்க வேண்டும். 24. இயேசு அவருடைய சீஷர்கள் ஒரு இடத்தை அடைந்த போது, அவர்கள் மாம்சபிரகாரமான, இல்லை பூமியின் இயற்கையான காரியங்களை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தனர். இப்பொழுது நாம் இங்கே ஒரு சில நிமிடங்கள் அப்படியே நிறுத்த விரும்புகிறோம். எப்பொழுதும் நம்மை தூரமாக இழுப்பது மாம்சமானவையாக இருப்பதில்லை. ஆனால் சில நேரங்களில் இயற்கையான காரியங்களே நம்மை தூரமாய் இழுக்கும். இயேசுவினுடைய ஊழியக்காரர்கள் இல்லை, அவருடைய சீஷர்கள் அவருக்கு எருசலேம் நகர தேவாலயத்தை, மகா பரிசுத்த ஸ்தலத்தில் தேவன் தம்முடைய ஷெக்கினா மகிமையில் பிரத்தியட்சமாயிருந்த அந்த மகத்தான தேவாலயத்தைச் சுட்டிக் காண்பித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் அவரிடத்தில் அதில் எவ்வளவு நல்ல கற்கள் பதிக்கப்பட்டிருந்தன என்பதைக் குறித்தும், உலகத்தின் அநேக இடங்களில் வெட்டப்பட்ட இந்தக் கற்களை எப்படியாய் மகத்தானத் தேவனுயை மதிநுட்பம் அவைகளை ஒன்று சேர்த்தது என்றும் கூறினர். அதனை நாற்பது வருடங்களாகக் கட்டுகையில் இரம்பம் அல்லது சுத்தியின் சத்தம்கூட கேட்கப்படவில்லையாம். அது மிகவும் மதிநுட்பத்திறனோடு ஒன்று சேர்க்கப்பட்டிருந்தது. அதன்பின்னர் எப்படியாய் தேவன் கேரூபீன்கள் மேல் வந்திறங்கினார். அது அவருடைய ஷெக்கினா மகிமையைக் காண்பித்தது. எனவே இந்த மகத்தான சபையில் அவர்கள் எவ்வளவு மகத்தான நம்பிக்கைக் கொண்டிருந்தனர். 25. அப்பொழுது இயேசு அவர்களிடத்தில், "இந்தக் காரியங்களையெல்லாம் பார்க்க வேண்டாம்" என்று கூறினார். அதே சமயத்தில் அது ஒரு பரிசுத்த ஸ்தலமாயிருந்தது. அது ஒரு நல்ல ஸ்தலமாயிருந்தது. அது கர்த்தரின் வாசஸ்தல வீடாய், ஒரு ஸ்தலமாய் இருந்தது. ஆனால் இயேசு, "இந்தக் காரியங்களைப் பார்க்காதீர்கள். இதைப் பார்க்கிலும் மிகவும் பெரிதான ஒரு காரியத்தை உங்களுக்கு கூறும்படி நான் வைத்துள்ளேன். ஏனென்றால் அந்த நேரம் வந்து கொண்டிருக்கிறது" என்றார். மேலும் அவர், "அது ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும்" என்றார். 26. நாம் எவ்வளவுதான் நம்முடைய மாம்சப்பிரகாரமான சரீரத்தைக் குறித்து அக்கறை எடுத்துக் கொள்ள முயற்சித்தாலும் அது முக்கியமல்ல. நாம் நம்முடைய ஸ்தாபனத்திற்கே எவ்வளவு கடினமாக உழைத்தாலும், நம்முடைய- நம்முடைய சபையின் ஒழுங்குகளுக்காகச் சபையில் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் அது முக்கியமல்ல. ஆனால் இந்த எல்லா காரியங்களும் மறைந்து ஒழிந்துபோகும் ஒரு நேரம் வந்து கொண்டிருக்கிறது. 27. இயேசு அதை அவர்களுக்கு கூறத்துவங்கினபோது, அவர்கள், ''உலகத்தின் முடிவைக் குறித்த வருகையின் அடையாளம் என்னவாயிருக்கும்?" என்று கேட்டனர். 28. அப்பொழுது இயேசு அவர்களுக்கு, "ஒரு கல்லின் மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நேரம் உண்டாகும். நீங்கள் யுத்தங்களையும், யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப் படுவீர்கள். கொள்ளைநோய்களும், பூமி அதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்" என்று கூறத் துவங்கினார். 29. அன்றொருநாள் கலிபோர்னியாவில் உள்ள ஒக்லேன்ட் எனுமிடத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் அங்கே இருந்தது எங்களுக்கு ஒரு சிலாக்கியமாயிருந்தது. மனைவி முதன்முறையாக பூமியதிர்ச்சியின்போது இருந்த சமயமாயிருந்தது. நான் சிகை அலங்காரக் கடையில் அமர்ந்து கொண்டிருந்தேன். நான் .... அந்த அறையோ அப்படியே கொஞ்சம் அசைந்தது. உடனே வானொலியில், "பூமியதிர்ச்சி உண்டானது" என்று துரிதமாக அறிவிக்கப்பட்டது. அப்பொழுது, "அவர்கள் சுமார் எட்டு நிமிடங்கள் ஒருவரையொருவர் நோக்கிப் பார்த்துக்கொண்டிருந்தனர்" என்றும் கூறினர். அப்பொழுது நான், "ஓ, இதுவே கடைசியான ஒன்றாயிருக்குமா" என்று எண்ணினேன். 30. நான் சிகை அலங்காரக் கடையிலிருந்து துரிதமாகப் புறப்பட்டு, வீதியில் நின்று கொண்டிருந்த என்னுடைய மனைவியைச் சந்தித்து, பின்னர் எங்களுடைய அன்பான சிறுவர்களுக்கு சில சிறு வண்ணப்பட அட்டைகளை அனுப்பும்படி வாங்குவதற்கு ஒரு சிறு மருந்துக் கடைக்குள்ளாக நடந்து சென்றோம். நாங்கள் அங்கிருந்தபோது, ஒன்றுமே புரியாத வகையில், ஒரு மனிதன் எப்போதுமே உணர்ந்திராத வினோதமான உணர்வுகள் உண்டாக, முழு பூமியும் அசையத் துவங்கியது. கண்ணாடிக் குப்பிகள் அலமாரியிலிருந்து விழத்துவங்கின. புகைப்போக்கி குழாய்கள் கட்டிடத்திலிருந்து விழத் துவங்கி வீதிக்குச் சென்று உடைந்து, வழிந்தோடின. சுவர்களிலிருந்து பூசப்பட்டிருந்த அரைச்சாந்து விழுந்த காரணத்தினால் ஜனங்கள் கூக்குரலிட்டுக் கொண்டு கதறினர். முப்பது, நாற்பது அடுக்கு மாடிகளைக் கொண்ட பெரிய கட்டிடங்கள் ஒன்றோடொன்று ஆடி, புகை எழும்புமளவிற்கும் மோதிக் கொண்டு, காரை பூசப்பட்டதிலிருந்து தூசியானது பெரிய காளான்களைப் போல எழும்பினது. ஜனங்களோ கூச்சலிட்டுக் கொண்டே ஓடத் துவங்கினர். அப்பொழுது நான், "அது சர்வவல்லமையுள்ள தேவனுடைய விரலாய் உள்ளது என்றும், 'அது சுவற்றின் மேல் எழுதின கையெழுத்து" என்றும் கூறினேன். 31. இயேசு, ''பூமியதிர்ச்சி பல இடங்களில் உண்டாவதைக் குறித்து நீங்கள் கேள்விப்படுவீர்கள்" என்றார். பூமியானது நெடுஞ்சாலையில் நீண்ட தூரத்திற்கு சுமார் ஐந்து அடி அகலத்திற்கு பிளந்து கொண்டு, நூற்றுக்கணக்கான அடிகள் பூமிக்குள் சென்றுவிட்டது. ஒரு இடத்தில் நெடுஞ்சாலையே முழுமையாக உள்ளே போய்விட்டது. அது பிளவுண்டு திறந்து கொண்டதை நான் எண்ணிப் பார்த்தபோது, அது, ''பல இடங்களில் பூமியதிர்ச்சி உண்டாகும்" என்று கூறின சர்வ வல்லமையுள்ள தேவனின் விரல் என்பதை ஏறக்குறைய அப்படியே என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. 32. அந்நாளின்போதே எட்டு பல்வேறுபட்ட இடங்களில் நிகழ்ந்த பூமியதிர்ச்சிகள் அந்த நகரத்தையே அசைத்திருந்தன. அதன் பின்னரோ, மதுபானக்கடைகள் எப்போதும் போல திறந்தே இருந்தன. குடிகாரர்கள் வீதிகளில் திரளாய் மொய்த்துக் கொண்டிருந்தனர். ஸ்திரீகளோ வீதியில் அரை நிர்வாண ஆடையை உடுத்திக் கொண்டு நடந்து சென்றனர். மற்றும் ஒவ்வொரு காரியமும் ஒன்றுமே எப்போதும் சம்பவித் திராதது போன்று காணப்பட்டது. இந்தத் தேசத்தை அசைக்கும் படி என்ன சம்பவிக்கும் என்று நான் அறியாத அளவிற்கு ஜனங்கள் அவ்வளவாய் உலகியல் வாழ்வில் சிக்குண்டுள்ளனர். அவர்கள் அதிக அக்கறையற்றவர்களாயிருப்பது போன்று தோன்றுகிறது. அவர்கள் கவனிக்கிறதில்லை. ஒரு மனிதனும்கூட ஒரு கருத்தைக் கூறினான். நான் என்னுடைய சொந்தக் கண்களினால் அவன் கூறுவதைக் கேட்டேன். அவன், "நான் என்ன செய்தேன் என்று நீங்கள் பார்த்தீர்களா? நான் என்னுடைய முஷ்டியை அசைத்தேன். எனவே நான் ஒரு மேம்பட்ட மனிதன்" என்றான். 33. அதைப்போன்ற தூஷணத்தை நான் இங்கு நம்முடைய சொந்த பட்டிணத்தில் இருந்தபோதும்கூட அந்தளவு அதைக் குறித்து ஒருபோதும் எண்ணிப் பார்த்ததே இல்லை. நான் நேற்று மாலை ஜார்ஜ் டவுனுக்கு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தேன். நீங்கள் அவ்வாறு செல்லும் போது வரப்போகும் புதிய நெடுஞ்சாலையில் இணையும் முன்னர் நீங்கள் இங்கே பிரிந்து செல்லும் பல பாதைகளை கடந்து செல்ல வேண்டும். அவ்வாறு செல்லுகையில் அங்கே ஒரு பெரிய அடையாளப்பலகை ஒட்டப்பட்டிருந்தது. அதில், "அவர் உயிர்த்தெழுந்து ஜீவனோடிருக்கிறார்" என்று எழுதப்பட்டிருந்தது. அதற்கு அடுத்த அடையாளம், அவை இரண்டு மாத்திரமே இருந்தன. அதிலோ, "எங்கே பட்வைஸர் என்று முத்திரையிடப் பட்ட மதுபானம் உள்ளதோ, அங்கு ஜீவன் உண்டு" என்று எழுதப்பட்டிருந்தது. 34. அப்பொழுது நான், "எத்தகைய தூஷணம்" என்பதை எண்ணிப் பார்த்தேன். அங்கே அது அப்படித்தான் இருந்தது. வேதம், "கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னர் மனுஷர்கள் தூஷிக்கிறவர்களாயும், தேவபக்தியற்ற தங்களுடைய சொந்த இச்சையில் நடக்கிறவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும் இருப்பார்கள்" என்று உரைத்துள்ளது. எப்படியாய் உலகம் அப்படிப்பட்ட ஒரு வஞ்சகத்திற்குள் ஆகியிருக்கிறது. | 35. அண்மையில் இந்தியாவில் உள்ள பம்பாயில் பில்லியும் (என் மகன்) நானும் அங்கே ஒரு மகத்தான கூட்டத்தில் இருந்த போது, இலட்சக்கணக்கான இந்துக்கள் தங்களுடைய ஜீவியத்தைக் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்தனர். அப்பொழுது அங்கே ஒரு பெரிய எச்சரிப்பு உண்டானது. நீங்கள் இயற்கையின் அறிவுத்திறனைக் கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். சடுதியாக யாதொரு காரணமும் அறியப்படாதிருக்கையில், அந்த நகரத்தில் உள்ள சிறு பறவைகள் யாவுமே அந்தத் தேசத்தை விட்டு செல்லத் துவங்கின. பறவைகள் திரள் திரளாக அந்தத் தேசத்தை விட்டுப் பறந்து சென்றன. அப்பொழுது அவர்கள் எல்லா கால்நடைகளையும், ஆடுகளையும் மாடுகளையும் கவனிக்கத் துவங்கினர். ஆனால் இந்தியாவில் அவர்களுடைய வேலி அமைப்புகள் நம்முடைய வேலி அமைப்புகளைப் போலிருக்கவில்லை. அவைகள் மரக்கட்டை களினாலான வேலி அமைப்புகளாயிராமல், அவைகள் பெரிய கற்களைக் கொண்டு உயரமாய் கட்டப்பட்டிருந்தன. அப்பொழுது எல்லா கால்நடைகளும் மதிற்சுவர்களை விட்டு தூரமாயும், கட்டிடங்களை விட்டு தூரமாயும் செல்லத் துவங்கி, வெளியே வயல் வெளிக்கு மத்தியில் போய் வயல்வெளியின் நடுவில் சுற்றி நிற்கத் துவங்கின. அதன்பின்னர் திடீரென்று ஒரு பெரிய பூமியதிர்ச்சி தாக்க மதிற்சுவர்கள், மரங்கள், கற்பாறைகள் குலுங்கி இடிந்து விழுந்து, அதனுடைய துண்டுகள் பறந்தன. ஆனால் அதன்பின்னரும் பறவைகள் திரும்பி வராமல், கால் நடைகளும் வயல் வெளியின் நடுவிலேயே நின்றிருந்தன. ஆனால் மனிதனோ எல்லாம் சரியாகிவிட்டது என்று எண்ணி திரும்பிச் சென்றான். அப்பொழுது அதற்கு அடுத்த நாள் மற்றொரு பூமியதிர்ச்சி உண்டாகி ஆட, அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து, அதனுடைய உடைந்த பாகங்கள் பறந்தன. ஆனால் மூன்றாம் நாள் கால்நடைகள் மதிற்சுவர்களண்டைக்கும், பறவைகள் நகரத்திற்கும் திரும்பின் . 36. ஓ, அடைக்கலான் குருவிகளை போஷிக்கிறவர், பேழைக்குள் தம்முடைய சிறிய சிருஷ்டிகளைக் கொண்டு வந்தவர் இன்னமும் ஜீவிக்கிறார், ராஜரீகம் பண்ணுகிறார். தேவன் தம்முடைய சாயலில் சிருஷ்டித்த மனிதனைப் பார்க்கிலும் அவைகள் தேவனைக் குறித்து அதிக ஞானமுடையவைகளாக இருப்பதுபோன்று தென்படுகின்றன. மனிதனோ தூஷிக்கிறான். பூமியின் சிறு சிருஷ்டிகளுக்குத் தேவன் அவைகளுக்காக வழியை அருளுகிறபடியால் அவைகள் அந்தப் பெரிய மதிற்சுவர்களிலிருந்து தங்களுடைய வழியில் சென்று விட்டன, இல்லையென்றால் அவைகள் கொல்லப்பட்டிருக்கும். பறவை களோ கற்பாறைகள் முன்னும் பின்னும் மோதி உடைந்த வெடி சத்தத்தில் சிக்கிக் கூழாகிவிட்டிருக்கும். 37. அவருடைய வருகையின் அடையாளங்களாயிற்றே! ஓ, இது நாம் ஜீவித்துக்கொண்டிருக்கிற ஒரு மகத்தான நாளாயிருக்கிறது. பல இடங்களில் பூமியதிர்ச்சிகளும், கொள்ளை நோயும் உண்டாகும் என்று அந்த எல்லாக் காரியங்களைக் குறித்தும் இயேசுவானவர் இங்கே உரைத்துவிட்டார். என்னுடைய வழியில் நான் அதைக் காணும்போது, கர்த்தருடைய வருகையைத் தவிர வேறொன்றுமே விடப்பட்டிருப்பதை நான் காணவில்லை . அது சமீபித்திருக்கிறது. 38. இயேசுவானவர் தம்முடைய ஜனங்களிடத்தில் தம்முடைய சொற்பொழிவில்கூட .... அவர், "அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்தகாலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும் போது, காலம் சமீபமாய் இருக்கிறது என்று அறியுங்கள்" என்றார். 39. அத்திமரம் என்னவாயிருந்தது என்பதைக் கவனியுங்கள். அத்திமரம் எப்பொழுதுமே யூத தேசமாய் இருந்து வருகிறது. அவர், "அத்திமரத்தை " மாத்திரம் கூறாமல், "மற்ற மரங்களையும்" கூறினார். "அத்திமரமும் மற்ற எல்லா மரங்களும் தங்களுடைய துளிரை விடும்போது", இப்பொழுது அவர் அத்திமரத்தைக் குறித்து மாத்திரம் பேசாமல், மற்ற மரங்களையும் குறித்துப் பேசினார். 40. இப்பொழுது அது தன்னுடைய துளிரை விடும்போது, நாம் சற்று கவனிப்போமாக. நாம் கடந்த சில ஆண்டுகளைப் பார்க்கிலும் மிகவும் விசேஷித்த ஒரு நேரத்தில் ஜீவித்து வருகிறோம். அப்போஸ்தலர்களின் நாட்கள் முதற்கொண்டே........ அப்பொழுதிலிருந்தே எப்பொழுதுமே உண்டாயிருந்திராத மகத்தான எழுப்புதல்களில் ஒன்றை புறஜாதி சபையானது உடையதாயிருந் து வருகிறது. ஓ, புறஜாதி சபைக்கு அப்பொழுது எழுப்புதல் உண்டாயிருக்கவில்லை. யூத சபையே எழுப்புதலை உடையதாயிருந்தது. ஆனால் புறஜாதி சபையோ கடந்த பத்து அல்லது பன்னிரண்டு வருடங்களாக மகத்தான எழுப்புதலின் சரித்திரமாயிருந்து வருகிறது. 41. நாம் மார்டின் லூத்தருடைய எழுப்புதலைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். ஆம் ஐயா, அது மகத்தான ஒன்றாய் இருந்தது. ஆனால் அது ஜெர்மனியில் மாத்திரமே அவ்வாறு இருந்தது. நாம் இங்கிலாந்தில் இருந்த வெஸ்லியின் எழுப்புதலைக் குறித்து சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அது இங்குப் பரவி மற்றும் ஒருசில பிரிட்டன் நாட்டின் தீவுகளில் பரவியது. ஆனாலும் அதிக அளவில் பலனளிக்கவே இல்லை. ஆனால் இந்நாளிலோ, இப்பொழுது சம்பவித்துக் கொண்டிருக்கிற எழுப்புதலோ இயற்கைக்கு மேம்பட்டதாய், எல்லையற்ற சமுத்திரத்திலிருந்து சமுத்திரம் வரைக்கும் முற்றிலுமாய் முழுமையாய்ப் பரவி, உலகளாவிய அளவில், மகத்தான வானொலியினூடாகவும், நாளிதழினூடாகவும், வெளியே சென்ற சுவிசேஷகர்களினூடாகவும், மனிதரால் ஆதரவு அளிக்கப்படாமலேயே இலட்சக்கணக்கான (ஆத்துமாக்களை) தேவனுடைய இராஜ்யத்திற்குள் பிறக்க வைத்திருக்கிற ஒரு எழுப்புதலைக் கொண்டு வந்துள்ளதே. 42. கர்த்தர் எனக்கு அளித்திருந்த என்னுடைய சொந்த எளிய ஆதரவற்ற ஊழியத்திலேயே இலட்சக்கணக்கான ஆத்துமாக்கள் தேவனுடைய இராஜ்ஜியத்திற்கு வந்துள்ளதை நான் கண்டிருக்கிறேன். அதைக் குறித்து சிந்தித்துப் பாருங்கள். மற்றவர்கள் இந்த மகத்தான ஊழியங்களைக் கொண்டு, அவர்கள் வானொலியில் பரப்பி இலட்சக்கணக்கானவரிடத்தில் தொடர்பு கொள்கின்றனர். எழுப்புதல் அக்கினிகள் உலகத்தில் உள்ள ஒவ்வொரு மலையின் மேலும் எரிந்துள்ளது. நடைமுறை யில் நான் .....ஏறக்குறையப் பத்து வருடங்களுக்கு முன்னிருந்தே.....நான்.....நாம் எழுப்பதலை துவக்கினோம். நாம் கடைசிக் காலத்தில் இருக்கிறோம். 43. இப்பொழுது கவனியுங்கள். அதற்கு சற்று முன்பு அப்பொழுதே அவர், ''புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்" என்று இங்கே தீர்க்கதரிசனம் உரைத்துள்ளார். முகமதியர்கள் அதைக் கைப்பற்றியுள்ளனர். நாம் அதை அறிந்துள்ளோம். இஸ்மவேலும், ஈசாக்கும் எப்படி இஸ்ரவேலரில் ஒருவரையொருவர் கழுத்தை நெறித்துக் கொண்டிருப்பார்கள் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளதோ அவ்வாறே அவர்கள் இருப்பதைக் குறித்த ஆபத்தான நிலைமையை இன்றிரவு நீங்கள் நோக்கிப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஒரு சில ஆண்டுகளுக்கு முன்னர் எருசலேமிலே எந்த யூதனுமே இல்லாதிருந்தனர். 44. இப்பொழுது இயேசு, "நீங்கள் அத்திமரம் துளிர்விடு கிறதைக் காணும்போது" என்று கூறுகிறார். இப்பொழுது, யூதர்கள் உலகம் முழுவதிலும் சிதறடிக்கப்பட்டு, அதிக எண்ணிக்கைக் கொண்டவர்களாக, இலட்சக்கணக்கானோர் ஜெர்மனியிலும், இத்தாலியிலும், ஐக்கிய நாடுகளிலும் மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து வருகின்றனர். தேவன், அவர் ஆரம்ப நாட்களில் பார்வோனுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினதுபோல, அவர் முசோலினியினுடைய இருதயத்தை யூதர்களின் மேல் கடினப்படுத்தினார். அப்பொழுது யூதர்கள் இத்தாலியிலிருந்து வெளியே விரட்டப்பட்டனர். அவர் ஹிட்லருடைய இருதயத்தை கடினப்படுத்தினார். அப்பொழுது அவர்கள் ஜெர்மானியிலிருந்து வெளியே விரட்டப்பட்டனர். அவர் ஸ்டாலினுடைய இருதயத்தைக் கடினப்படுத்தினார். அப்பொழுது அவர்கள் ரஷ்யாவிலிருந்து வெளியே விரட்டப்பட்டனர். 45. ஐக்கிய நாடுகளாகிய நாம் அரபியர்களின் பட்சத்தில் சார்ந்து கொண்டோம் என்று செய்தித்தாள் பிரசுரித்துள்ளதை கவனித்தீர்களா? ஓ, சகோதரனே, சுவற்றின் மேல் கையெழுத்துள்ளதே! தேவனோ, ''இஸ்ரவேலை ஆசீர்வதிக்கிறவன் ஆசீர்வதிக்கப்படுவான், இஸ்ரவேலை சபிக்கிறவன் சபிக்கப்படு வான்" என்று கூறினாரே. 46. இப்பொழுது நான் ஒரு திரைப்படத்தை வீட்டில் வைத்திருக்கிறேன், இல்லை அது அந்த நேரத்தில் வாடகைக்கு வாங்கப்பட்டது என்றே நான் நினைக்கிறேன். "அது நள்ளிர விற்கு முன்னர் மூன்று நிமிடங்கள்" என்று விஞ்ஞானிகளால் பெயரிடப்பட்டது. விஞ்ஞான உலகமோ, "நள்ளிரவிற்கு மூன்று நிமிடங்கள் ஆகும் அளவிற்கு நேரம் கடந்துவிட்டது" என்று கூறியுள்ளது. அவர்கள் ஜலவாயு (Hydrogen) அல்லது பிராண வாயு, (Oxygen) அணுசக்தி மற்றும் அந்த மகத்தான சக்தி வாய்ந்தவைகளை பயன்படுத்தி ஐந்தே நிமிடங்களில் முழுமை யாக அழித்து ஒழிக்கக்கூடியவைகளைக் கண்டுபிடித்தபோது, அவர்கள் அதை நள்ளிரவிற்கு முன் ஒரு நிமிடம் என்றாகுமள விற்கு குறைத்துவிட்டனர் என்றே நான் கருதுகிறேன். இன்றிரவே அவர்களால் வட அமெரிக்காவின் முழு கண்டத்தி லும் முப்பதே நிமிடங்களில் ஒரு நபர்கூட உயிரோடிராதபடிக்கு செய்யக்கூடும். அது நம்மை வெறுக்கிற ஒரு கூட்ட மத நம்பிக்கையற்றவர்களின் கரங்களில் இருந்து கொண்டிருக்கிறது. அது மட்டுமின்றி நாம் எல்லா இடத்தைச் சுற்றிலும் அகன்ற படகுகளையும், கப்பல்களையும் நிறுத்திவைத்துள்ளோம்......... சைபீரியா, ஹங்கேரி மற்றும் பல்வேறுபட்ட இடங்களில் உள்ள நம்முடைய கப்பல்களிலும் அதே மாதிரியான ஏவுகணைகள் நிரப்பப்பட்டு, அங்கே நின்று கொண்டிருக்கின்றன. 47. சகோதரர்களே, அது நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் காலம் கடந்ததாகவே உள்ளது. சோதோம் கொமோராவினர் தங்களுடையக் கடைசி நேரத்தில் ஜீவித்துக் கொண்டிருந்தனர் என்பதை அன்றிரவும் அறியாமலிருந்தனர். முன்னறிவிக்கப்பட் டிருந்த சங்காரத் தூதன் வரவிருந்த அந்த இரவை எகிப்தியர் அறியாதிருந்தனர். பியர்ல் துறைமுகம் என்ற இடத்தில் நடைபெற்ற அந்தத் தாக்குதலை அறியாதிருந்தோம். நாமோ தராசிலே நிறுத்தப்பட்டு குறையக்காணப்பட்டிருக்கிறோமே! நாம் முடிவு நேர நெருக்கத்தில் இருக்கிறோமே! 48. என்ன சம்பவிக்கும்......அவர்கள் சரியாக மாஸ்கோ விலிருந்து அந்த ஏவுகணைகளை வீசக்கூடுமானால், தொலை நிலை இயக்கமானியின் மூலம் இயக்கி, லூயிவில்லிலுள்ள நான்காம் தெருவிற்குச் சரியாக அந்த அணுகுண்டை அந்தத் தேசத்திற்கு வீசவேண்டும் என்று அவர்கள் விரும்பினால் வீசலாம். அது உண்மை. நாம் எங்கோச் சமுத்திரத்தில் உள்ள நம்முடைய கப்பல்களில் நின்று மாஸ்கோவின் தலைநகரத்திற்கு நாம் ஏவுகணைகளை நேரடியாக எறியவேண்டுமானாலும் எறிய முடியும். என் சகோதரனே, அந்த மகத்தான ஏவுகணை நிலை குலைவை ஏற்படுத்துமானால் இந்தத் தேசம் ஓர் அதிர்வையே பெற்றுக்கொள்ளும். அதே நேரத்தில் நாமும் அவ்வாறு அதே காரியங்களின் மூலம் அப்புறத்தில் அவர்களை நிலைகுலையச் செய்து அதை அதிரச் செய்வதால் என்ன சம்பவிக்கும்? நாம் ஒரு சிறிய, மிகச்சிறிய, மிகச்சிறிய மெல்லிய மேற்பரப்பினைக் கொண்ட பகுதியின் மேல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். பூமி யதிர்ச்சிகள் இப்பூமியைச் சுற்றி சுற்றி அரித்து அது ஒரு முட்டையின் மேலோட்டைப் போன்று காணப்படுகிறது. எனவே அது ஒரு முறை பெரிய அளவில் வெடிக்குமேயானால், இந்த எட்டாயிரம் மைல்கள் ஆழத்தில் உள்ள அடர்ந்த எரிமலைக் குழம்புகள் ஆகாயத்திற்கு பீறிட்டுத் தெறிக்கும். அப்பொழுது தேவன் என்ன சம்பவிக்கும் என்று கூறினாரோ சரியாக அதுவே சம்பவிக்கும். 49. நாம் முடிவின் நேரத்தில் இருக்கிறோம். நாம் இங்கே தான் இருக்கிறோம். அதைத் தடுக்க வழியே கிடையாது. பிச்சையெடுக்கின்ற யாவுமே ... நாம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐசன்ஹோவர் அவர்களை நியமிக்கலாம். ஆனால் அது இதனை ஒருபோதும் தடுத்து நிறுத்தாது. இயேசு கிறிஸ்து இந்த நேரங்கள் வரும் என்று கூறினார். நாம் இங்குதான் இருக்கிறோம். அத்திமரம் தன்னுடையத் துளிரை விடுகிறது. 50. நீங்கள் லுக் (Look) என்ற பத்திரிக்கையை வாசிப்பீர் களேயானால், எப்படி அவர்கள் பெரிய ஆகாய விமானங்களை ஈரானுக்குக் கொண்டுச் சென்று, அங்கிருந்து இந்த யூதர்களை கூட்டமாக ஏற்றிக்கொண்டு வந்தனர் என்பதை அப்புத்தகத்தில் உள்ள புகைப்படத்தில் காணலாம். அங்கே அவர்களில் ஆயிரக் கணக்கானோர் பாபிலோனுக்கு கொண்டுச் செல்லப்பட்டது முதற் கொண்டு இரண்டாயிரத்தைநூறு ஆண்டுகளாக அங்கேயே விடப்பட்டிருந்தனர். அவர்கள் மரத்தாலான பண்டைய கருவி களைக் கொண்டே உழுது கொண்டிருந்தனர். அவர்கள் இயேசுவானவர் பூமியின் மேலிருந்ததைக் குறித்தும்கூட ஒன்றுமே அறியாதிருந்தனர். அவர்கள் தங்களுடைய பண்டைய யூத பாரம்பரியத்தைத் தவிர, அவர்கள் வாழ்ந்துவந்த பாரம்பரியங்களைத் தவிர வேறெந்த காரியத்தைக் குறித்தும் ஒன்றுமே அறியாதிருந்தனர். இந்த ஆகாய விமானங்கள் அங்கு கீழே சென்று அவர்களை தாய்நாட்டிற்கு திரும்பக் கொண்டு செல்லும்படி இந்த யூதர்களை ஏற்றத் துவங்கினபோதோ ...... 51. தீர்க்கதரிசியோ, "அவர்கள் அந்த சிறையிருப்பிலிருந்து வெளியே வரும் போது, தேவன் அவர்களைக் கழுகின் செட்டைகளின் மேல் கொண்டு வருவார்" என்று இரண்டாயிரத்து எண்ணூறு அல்லது மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தீர்க்கதரிசனம் உரைத்துள்ளான். அந்த தீர்க்கதரிசி ஆகாய விமானம் வருவதைக் கண்டான். அவன் அவர்கள் அதில் அமர்ந்திருப்பதையும், அது அவர்களை ஏற்றிக்கொண்டு மீண்டும் அவர்களைத் தாய்நாட்டிற்கே கொண்டுச் செல்வதையும் கண்டான். ஆனால் அதை என்னவென்று அழைப்பது என்று அவனுக்குத் தெரியவில்லை . எனவே அவன் வெறுமனே....அதுவே அவனுக்குக் கழுகைப்போன்று காணப்பட்டது. எனவே அவன், ''அவர்கள் கழுகின் செட்டைகளின் மேல் திரும்ப கொண்டு செல்லப்படுவார்கள்" என்றான். 52. அவர்கள் அந்த ஆகாய விமானத்திலிருந்து இறங்கின போது, வாலிபர், வயோதிபர்களுக்கு உதவி செய்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது அவர்கள் நேர்முகப் பேட்டி காணப்பட்டனர். அப்பேட்டியாளர்கள், "நீங்கள் மரிக்கும்படியாக தாய் நாட்டிற்கு திரும்பி வந்திருக்கிறீர்களா?" என்று கேட்டனர். அதற்கு அவர்கள், "இல்லை நாங்கள் மேசியாவைக் காணும்படிக்கே திரும்பி வந்துள்ளோம்" என்று பதிலுரைத்தனர். 53. ஓ, பெரிதான நீராவிக்கப்பல்கள் கடந்த சில வருடங்களாக உலகத்தைச் சுற்றிலுமிருந்து, வாலிப மற்றும் வயோதிப யூதர்களையும் ஏற்றிக்கொண்டு வந்துள்ளன. அவர்கள் கிழக்கி லிருந்தும், மேற்கிலிருந்தும் வரும் போது தங்களுடைய ஆடைகளையே அணிந்திருந்தனர். எருசலேமின் தலைநகரத்தின் மேல் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக பறக்காம லிருந்த உலகத்திலேயே மிகப்பழமையான தாவீதின் ஆறு முனை நட்சத்திரக் கொடி பறக்க, அது இன்றிரவு ஒரு தேசமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்திமரமானது தன்னுடய துளிர்களை விட்டுக் கொண்டிருக்கிறது. எருசலேம் வளர்ந்து கொண்டிருக்கிறது. கர்த்தர், திரும்ப அளித்துக் கொண்டிருக்கிறார். இவை தீர்க்கதரிசி முன்னுரைத்த அடையாளங்களாகும்; புறஜாதியாரின் நாட்கள் எண்ணப்பட்டு, பயங்கரங்களால் நிறைந்துள்ளன; ஒ, சிதறுண்டோரே, உங்களுடைய சொந்தத்திற்குத் திரும்புங்கள். மீட்பின் நாள் சமீபமாயிருக்கிறது. மனுஷருடைய இருதயங்கள் பயத்தால் சோர்ந்து போய்க் கொண்டிருக்கிறது. தேவனுடைய ஆவியினால் நிரப்பப்பட்டு, உங்களுடைய தீவட்டிகளைச் சீர்ப்படுத்திச் சரிசெய்யுங்கள். மேல் நோக்கிப் பாருங்கள்! உங்களுடைய மீட்பு சமீபமாயிருக்கிறது. 54. நாம் நினைப்பதைக் காட்டிலும் காலம் தாமதமாயுள்ளது. நாம் ஓர் இருக்கையை நிரப்ப சபைக்கு வருகிறதில்லை. நாம் ஒரு நல்ல பிரசங்கத்தைக் கேட்க சபைக்கு வருகிறதில்லை அல்லது நல்ல இசையைக் கேட்க சபைக்கு வருகிறதில்லை. அவைகள் யாவுமே அவைகளினுடைய ஸ்தானத்தில் உள்ளன. ஆனால் நாம் தேவனோடு சரிசெய்து கொள்ளவும், நம்முடைய ஆத்துமாவினுடைய இரட்சிப்பிற்காக சபைக்கு வருவதே மேலானதாகும். ஏனென்றால் மீட்பின் நாள் சமீபமாயிருக்கிறது. 55. தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து இதை ஒரு ஸ்திரீக்கு ஒப்பிட்டுக் கூறினார். (அவரே கூறினார்). இன்றிரவு நம்முடைய பாடப்பொருளில் இந்த ஸ்திரீ அவளுடைய கணவன் வெளியே சென்றிருந்தான் என்றும், அவள் தன்னுடைய தலைமாலையிலிருந்து வெள்ளிக்காசு ஒன்றைத் தொலைத்து விட்டாள் என்றும் நாம் கண்டறிகிறோம். இப்பொழுது நான் அதை விளக்கிக்கூற முயற்சிப்பேன். 56. இன்றைக்கு ஒரு ஸ்திரீ விவாகம் செய்து கொண்டால், அவள் விவாகம் செய்து கொண்டவள் என்பதற்கு அடையாள மாக ஒரு விவாக மோதிரம் அணிய வேண்டும். அதுவே மற்ற மனிதன் அவளோடு எந்தக் காரியத்தையும் செய்யாதபடிக்கு காத்துக் கொள்வதாயிருக்கிறது. எனவே அவர்கள் பார்க்கும் போது, அவள் ஒரு விவாகமான ஸ்திரீயாயிருக்கிறாள் என்பதைக் காண்கின்றனர். 57. அந்நாட்களில் அவர்கள் விவாக மோதிரங்களை உடையவர்களாக இருக்கவில்லை. அவர்கள் ஒரு தலை மாலையை உடையவர்களாக இருந்தனர். (அவர்கள் அதைத் தலைமாலை என அழைக்கின்றனர்). எனவே அவர்கள் அதைத் தங்களுடைய தலையில் அணிந்து வந்தனர். அது பத்து வெள்ளிக்காசைக் கொண்டதாயிருந்தது. அது அவர்களுடையத் தலையைச் சுற்றிப் பொருத்தப்பட்டிருந்தது. அதுவே அவள் ஒரு விவாகமான ஸ்திரீ என்பதற்கு ஒரு அடையாளமாயிருந்தது. எனவே எந்த மனிதனும் அவளை ஏமாற்றவோ, எந்தப் பையனும் அவளோடு விளையாட்டாகக் காதல் புரியவோ முடியாததாயிருந்தது. ஏனென்றால் அவர்கள் விவாகமானவர்கள். 58. அந்த வெள்ளிக்காசு ஒவ்வொன்றும் ..... நமக்கு நேரம் மட்டும் இருக்குமேயானால் (ஆனால் எனக்கு நேரமில்லை, ஆயினும் நான் என்னுடைய வார்த்தையை கூடுமானவரைக் காத்துக் கொள்ள முயற்சிக்கப்போகிறேன்). அந்த வெள்ளிக் காசுகள் ஒவ்வொன்றின் பொருளும் என்னவென்பதை என்னால் உங்களுக்குச் சொல்ல முடியும். அவை அங்கே பொருத்தப் பட்டுள்ளன. ஒவ்வொரு வெள்ளிக்காசும் அந்த ஸ்திரீயினுடைய ஒரு குறிப்பிட்ட நற்குணத்தைப் பொருட்படுத்தினது. முதலாவது ஒன்று அவளுடைய கணவனுக்குரிய அவளுடைய அன்பையே பொருட்படுத்துகிறது. இரண்டாவது அவனுக்காக சுத்தமாக ஜீவிக்கும் படியான அவளுடைய கற்பின் அடையாளமாயிருக்கிறது. மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது என தொடர்ந்து ஒன்பது மற்றும் பத்தாகும். 59. நீங்கள் அதைக் காணவேண்டுமானால் கலாத்தியர் 5-ல் பாருங்கள். அப்பொழுது அந்த ஸ்திரீ சபையைப் பிரதி நிதித்துவப்படுத்துவதையும், சபையானது கிறிஸ்துவுக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள மனைவியாயிருக்கிறது என்பதையும் நீங்கள் கண்டறிவீர்கள். சபையானது அணிந்து கொள்ள வேண்டிய தலைமாலை கலாத்தியர் 5-ல் காணப்படு கிறது. அது அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, சாந்தம், நற்குணம், பொறுமை ஆகும். அதுவே சபையில் அணிந்து கொள்ள வேண்டிய தலை மாலையாயிருக்கிறது. சகோதர சினேகம், தயவு, ஐக்கியம். 60. இந்த ஸ்திரீ.......அவள் அந்த வெள்ளிக்காசுகளில் ஒன்றைத் தொலைத்துவிட்டிருந்தாள் என்பதை அவள் அறிந்து கொண்டது கிட்டத்தட்ட இருளான நேரமாக இருந்திருக்க வேண்டும். 61. ஓ. சபையானது அந்த எல்லா வெள்ளிக்காசுகளையும் வைத்துள்ளதா என்ற விளக்க விபரப்பட்டியலை எடுக்க வேண்டிய நேரம் ஒன்று எப்போதாவது இருந்திருக்குமானால் அது இந்த நேரமாகத்தான் இருக்க வேண்டும். இப்பொழுதோ இருளாகிக் கொண்டே இருக்கிறது. பிசாசுகளின் நடமாட்ட அலைக் கழிப்புகளும், நாகரீகத்தை அழிக்கும் மேகங்களும், பூமியின் மேல் தொங்கிக் கொண்டிருக்க, பாவமும், ஒழுக்கக்கேடும் எங்கும் காணப்படுகின்றது. நாம் பொல்லாங்காய் காணப்படுகின்ற ஒரு மிகப்பெரிய நேரத்தில் ஜீவித்துக் கொண்டிருக்கிறோம். ஜனங்கள் வெறுமனே ஒரு போலித்தனத்திற்காகவே சபைக்குச் செல்கிறார்கள். ஜனங்கள் தங்களுடைய கயமைத்தனத்தை மறைக்கும்படி முயற்சிக்கவே சபைக்குச் செல்கிறார்கள். ஜனங்கள் சபைக்குச் சென்று, கிறிஸ்தவ மார்க்கத்தைக் குறித்து உரிமைக் கொண்டாடி, மற்ற உலகத்தாரைப் போன்றே ஜீவித்து, குடித்து, புகைத்து, சூதாடுகின்றனர். ஸ்திரீகள் ஒழுக்கக் கேடான முறையில் உடை உடுத்திக் கொண்டு, தங்களுடைய சொந்த உடைமாற்றும் அறையில் அவர்கள் அணியக்கூடாத உடைகளையே அணிந்து கொண்டு வீதியில் பொது மக்களுக்கு முன்பாகச் செல்கிறார்கள். சகோதரசிநேகம் என்ற ஒரு காரியம் ஏறக்குறைய ஒழிந்தே போய்விட்டது. நாம் ஒரு வெள்ளிக் காசைத் தொலைத்து விட்டிருக்கிறோம். ஆனால் நாம் நடை முறை ரீதியாக அவைகள் ஒவ்வொன்றையுமே தொலைத்து விட்டிருக்கிறோம். 62. நினைவிருக்கட்டும், இரவாகிக் கொண்டிருந்தபோது, அவளுடைய கணவன் திரும்ப வந்துவிடுவான். அப்பொழுது அவன் அந்த வெள்ளிக்காசுகளில் ஒன்றில்லாதவளாய் அவளை கண்டு பிடித்திருப்பானேயாகில் அவள், ஒரு ''வேசி" என்று அடையாளமிடப் பட்டிருந்தாள் என்பதையே அது காண்பித்திருக்கும். 63. அவள் கறைபடுத்தியிருந்தாளேயானால் அல்லது எந்த வழியிலாவது தன்னைக் கறைப்படுத்திக் கொண்டிருந்திருந்தால், அப்பொழுது அது ஜனங்களால் கண்டறியப்பட்டு, அவர்கள் அவளை ஆசாரியனுக்கு முன்பாக கொண்டு செல்ல, அவளைக் கண்டுபிடித்திருந்தச் சாட்சிகளும் கொண்டு செல்லப்பட, அதன் பின்னர் அவள் விவாகமான ஒரு ஸ்திரீ என்பதை ஆசாரியன் கண்டு, அவள் தவறு செய்திருந்தபடியால் (அவளுடைய தலை மாலையிலிருந்து) அந்த வெள்ளிக்காசை எடுத்துப் போட்டுவிடுவான். அவள் தன்னுடையக் கற்பை அழித்து விட்டிருந்தாளேயானால், அப்பொழுது அவர்கள் அந்த வெள்ளிக் காசை எடுத்துவிட்டிருப்பார்கள். அவள் சரசமாடியிருந்திருப் பாளேயானால், அப்பொழுது அவள் தன்னுடைய கணவனுக்கு உண்மையாயில்லை என்று காண்பிக்க அவர்கள் அந்த ஒன்றை வெளியே எடுத்துவிடுவார்கள். அது என்னவாயிருந்தாலும் அவர்கள் அதை வெளியே எடுத்துவிடுவார்கள். அப்பொழுது அவளுடைய கணவன் திரும்பும்போது அவள் அடையாளமிடப் பட்டிருந்தாள் என்று அவன் கண்டு, அவளை உடனடியாக அவன் விவாகரத்து செய்துவிட்டு, அப்படிப்பட்ட ஒரு ஸ்திரீயோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளவே மாட்டான். அவனுக்கு அப்படிப்பட்ட ஒரு ஸ்திரீயே வேண்டியதில்லை. 64. ஆகையால் தொடர்ந்து இருளாகிக் கொண்டே இருந்த படியால், அவள் ஏதோ ஒன்றைத் தொலைத்து விட்டிருந்தாள் என்றும், அது அவளுடைய கணவன் வருவதற்கான நேரமாயிருந்தது என்பதையும், அது காலதாமதமாகிக் கொண்டிருந்த தாயிருந்தது என்பதையும் அவள் அறிந்து கொண்டாள். 65. சபையானது, நம்முடைய தூய்மையையும், நம்முடைய உத்தமத்தையும், நம்முடைய பக்தியையும் தாமாகவே தேவ னுடைய வார்த்தையினால் சோதித்துப் பார்ப்பது மேலானதாயிருக்கும். நாமோ கோள்கூறுபவர்களாயும், பழி சுமத்துபவர்களாயும், சிகரெட்டுப் புகைக்கிறவர்களாயும், புறங்கூறுபவர்களாயும், வர்ணந்தீட்டப்பட்ட யேசபேல்களாயும், ஒவ்வொரு நாளும் காணப்படுகின்ற ஒவ்வொன்றையும், உலகத்தினரைப் போன்றே காரியங்களைச் செய்கிறவர்களாய் மாறியிருக்கிறோம். கிறிஸ்தவ சபையானது ஒன்றிலிருந்து மற்றொன்று என்று நீங்கள் எடுத்துக் கூற முடியாத அளவிற்கு இன்றைக்கு அந்தக் காரியங்களில் ஒன்றாகச் சேர்ந்துக் கொண்டிருக்கிறது. இதுவே விளக்க விபரப்பட்டியலிட வேண்டிய நேரமாகும். இது காலதாமதமாகிக் கொண்டிருக்கிறது. 66. இப்பொழுது ஒழுங்கின்படி ......... அவள் ஒரு விளக்கைக் கொளுத்த வேண்டிய அளவிற்கு அது மிகவும் காலதாமதமாகி விட்டது. அவள் ஒரு விளக்கை வைத்திருந் தாள். அவள் ஒரு விளக்கை மாத்திரம் வைத்திருக்காமல், ஒரு துடைப்பத்தையும் வைத்திருந்தபடியால், அவள் வீட்டை சுத்தம் செய்யச் சென்றாள். 67. ஓ, சகோதரனே! ஒரு விளக்கினுடைய வெளிச்சத்தின் நேரம் நமக்கு எப்போதாவது தேவையிருந்தால் நலமாயிருக்கும். சுவிசேஷ வெளிச்சத்தை அனுப்பவே பரிசுத்த ஆவியானவர் மீண்டும் சபைக்கு வந்துள்ளார். அதிகமான உணர்ச்சிவசப்படு வதினால் அல்ல, ஏதோ பித்துக்குளித்தனமானவற்றினால் அல்ல, ஏதோ உணர்ச்சிவசப்படுதலின் மூலம் படிப்படியாக கிளர்ச்சி யூட்டப்படுவதினால் அல்ல, சந்தோஷத்திற்காக குதிப்பதினால் அல்ல, புருஷரும், ஸ்திரீகளும் தேவனோடு சரிப்படுத்திக் கொள்ளும்போது உண்டாகின்ற இருதயத்தைச் சோதித்தறியும் ஒரு அனுபவத்தினாலேயாகும். சரி. நாம் கடைசி நேரத்தில் இருக்கிறோம். 68. அவள் தனக்கு வெளிச்சம் கொடுக்கும்படியாக ஒரு விளக்கைக் கொளுத்தினாள். சகோதரனே, இன்றிரவு இங்குள்ள ஒவ்வொரு சிறிய விளக்கும் கொளுத்தப்பட வேண்டியதாயுள்ளது. அது மட்டுமின்றி அவள் துடைப்பத்தை வைத்திருந்தாள். அண்டை வீட்டாரால் தூசி பறந்ததைக் காணமுடிந்தது. அவள் உண்மையாகவே ஒரு வீட்டை சுத்தம் செய்யும் நேரத்தை உடையவளாயிருந்தாள். ஏனென்றால் அது ஏறக்குறைய அவளுடைய கணவன் வரும்படியான நேரமாய் இருந்தது. அவன் அவளை அந்தத் தொலைந்துபோன ஒரு வெள்ளிக்காசோடு பிடித்திருப்பானேயானால், அப்பொழுது அவள், "ஒரு வேசியாயிருந்திருப்பாள்." 69. சகோதரனே, ஜீவனுள்ள தேவனுடைய சபையாகிய நாம், இப்பொழுது ஜீவித்துக் கொண்டிருக்கிற இந்த மகத்தான வேளையில், விசேஷமாக இந்த எல்லாக் காரியங்களும் சம்பவிப்பதை நாம் காணும்போது, தேவனுக்கு முன்பாகச் செல்ல சுவிசேஷ வார்த்தையினுடைய விளக்கின் வெளிச்சத்தில் நாம் குறைவுற்றிருக்க வில்லையா என்பதைக் கண்டறியும்படியாக நம்மையேப் பரிசோதித்து சரிபார்த்துக் கொள்வது நமக்கு இன்றியமையாததாயிருக்கிறது. நாம் கடைசி நேரத்தில் இருக்கிறோம். கிறிஸ்துவின் வருகைச் சமீபமாயிருக்கிறது. இந்த உலகத்தில் சபைக்காக வேறொரு நம்பிக்கையே கிடையாது. 70. பாருங்கள், சபையானது செயலற்று சோம்பேறித்தனமாய் இருக்கிறது. சபையானது மனசாட்சியே இல்லாததாயிருக் கிறது. உங்களால் அவைகளை எழுப்ப இயலாது. அவைகள் அந்நிலைமைக்குள்ளாக வரும் என்றும், அப்பொழுது அவைகள், ''இதோ, நம்முடைய கர்த்தர் தம்முடைய வருகையை தாமதம் பண்ணுகிறார்' என்று கூறுவார்கள் என்றும், அவர்கள் ஒருவரையொருவர் கடித்துப் பட்சித்து சுற்றி சண்டையிட்டுக் கொள்வார்கள்" என்றும் வேதம் உரைத்துள்ளது. இதுவே சரியாக அந்த வேளையாயிருக்கிறது. ஒவ்வொரு காரியமும் ஆயத்தமாயிருக்கிறது. சரித்திரத்தில் அப்பொழுது பக்கங்கள் திருப்பப்பட்டது போன்றே இப்பொழுதும் திருப்பப்பட்டுள்ளது. கர்த்தருடைய வருகையோ ஆயத்தமாயிருக்கிறது. 71. லூத்தரன் சபையானது தன்னுடைய வெளிச்சத்தை இழந்துவிட்டது. மெத்தோடிஸ்டு சபையானது தன்னுடைய வெளிச்சத்தை இழந்துவிட்டது. பாப்டிஸ்டு சபையானது தன்னுடைய வெளிச்சத்தை இழந்துவிட்டது. பெந்தெகோஸ்தே சபையானது தன்னுடைய வெளிச்சத்தை இழந்துவிட்டது. ஒவ்வொரு வெளிச்சமும் போய்விட்டது போன்றே தென்படுகிறது. 72. பெந்தெகோஸ்தே ஜனங்களும், பரிசுத்த ஜனங்கள் என்ற ஸ்தாபன பிரிவினரும் (Holiness People) சரியாக மெத்தோடிஸ்டுகளைப் போலவே நடந்து கொள்கிறார்கள். மெத்தோடிஸ்டுகள் பாப்டிஸ்டுகளைப் போல நடந்து கொள்கிறார்கள். லூத்தரன்கள் கத்தோலிக்கர்களைப் போலவே நடந்து கொள்ளுகிறார்கள். அவையாவுமே ஒரு பெரிய ஒட்டு மொத்தமான பாவத்தின் கதம்பக் கூளத்திற்கே திரும்பிச் சென்று விட்டன. அது உண்மை . நாம் கர்த்தருடைய வருகையின் முடிவின் நேரத்தில் இருக்கிறோம். 73. இப்பொழுது, அவளோ வீட்டைச் சுத்தம் செய்யும் ஒரு நேரத்தை உடையவளாயிருந்தாள். அவள் தரையைத் தேய்த்துக் கழுவினாள். அதன் பின்னர் அவள் சுவர்களைப் பெருக்கித் துடைத்தாள். பின்னர் அவள் சிலந்திக்கூட்டைத் தகர்த்து, அவள் தொலைத்து விட்டிருந்ததைக் கண்டுபிடிக்கும் வரை அவள் தொடர்ந்துச் சுத்தம் செய்துக் கொண்டேயிருந்தாள். அவள் அதைக் கண்டு பிடித்துவிட்டபோதோ தன்னுடைய சிறிய தோழமைச் சபைகளை அப்பொழுதே வரும்படி அழைத்தாள். 74. நீங்கள் ஒரு மெத்தோடிஸ்டாகவோ, பாப்டிஸ்டாகவோ, பெந்தெகொஸ்தேவாகவோ, பிரஸ்பிடேரியனாகவோ இருந்தாலும் நான் கவலைப்படவில்லை. வாருங்கள் நாம் ஒன்று சேர்ந்து களிகூருவோமாக. அந்த நேரம் வருகிறபோது. சபை யானது அதனுடைய சகோதரசிநேகத்தைக் கண்டு பிடிக்கிறபோது, சபையானது அதனுடைய பரிசுத்த கண்ணியத்தைக் கண்டு பிடிக்கிறபோது, சபையானது கிறிஸ்துவுக்குள் அதனுடைய ஸ்தானத்தை கண்டு பிடிக்கிறபோது, அது சரீரத்தின் மற்ற அங்கத்தினர் களை அழைத்து, வந்து ''எங்களோடு களி கூருங்கள்'' என்று கூறும். தேவன் சபையானது தன்னை நேசிக்க வேண்டும் என்று விரும்புகிறார். 75. நான் ஸ்திரீயின் நற்பண்புகள் என்பதின் பேரில் ஞாயிறு காலை பேசிக் கொண்டிருந்தேன் என்று நான் நினைக்கிறேன். தேவன் ஒரு மனிதனுக்கு ஒரு மனைவியை அளித்திருக்கும்போது, அவன் களைப்படைந்து வீட்டிற்கு வரும் போது, அதைப் பார்க்கிலும் இனிமையானக் காரியத்தை அவன் கண்டறியக் கூடுமா? எவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட காரியம். ஒரு புருஷனும், ஒரு ஸ்திரீயும் இணை பிரியாதவர்களா யிருக்கிறார்கள், அவர்கள் ஒன்றாயிருக்கிறார்கள். சிருஷ்டிப்பில் தேவன் முதலில் அவர்கள் இருவரையும் ஒன்றாகச் சேர்த்தே சிருஷ்டித்தார். எனவே அவர்கள் ஒரே இருதயமும், ஆத்துமாவும், சிந்தையுங் கொண்டவர்களாய் மற்ற ஒவ்வொரு காரியத்திலும் அவ்வாறே இருந்தனர். அவர் மனிதனை பூமியின் தூசியிலிருந்து உண்டு பண்ணினார். பின்னர் அவனைத் தன்னுடைய மனைவியினிடத்திலிருந்து வேறுபிரித்தார். அவர் ஏவாளை உண்டாக்கினபோது, அவளை ஒரு-ஒரு ஸ்திரீயாக உண்டுபண்ண இன்னும் கொஞ்சம் மண்ணை எடுக்கும்படி செல்லாமல், அவர் ஆதாமின் பக்கவாட்டிலிருந்த ஒரு விலா எலும்பை எடுத்து அவனுடைய மனைவியை உண்டாக்கினார். அப்பொழுது அவன், "அவள் என் எலும்பின் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாயிருக்கிறாள்'' என்றான். அவர்கள் இருதயத்திலும், ஆத்துமாவிலும், சரீரத்திலும் ஒன்றாகவே இருந்தனர். 76. அது கிறிஸ்துவிற்கு ஒரு மாதிரியாயுள்ளது. தேவன் கிறிஸ்துவினுடைய சபையை ஒரு கொள்கையிலிருந்து எடுக்க வில்லை. அவர் அதை ஒரு ஸ்தாபனத்திலிருந்தும் எடுக்கவில்லை . அவர் அதைக் கிறிஸ்துவினுடைய இருதயத்திலிருந்து, அவருடையப் பக்கவாட்டில் குத்தப்பட்ட ஈட்டியினால் வடிந்த இரத்தத்தினூடாகவே எடுத்தார். 77. என் சகோதரனே, சகோதரியே, நீங்கள் எவ்வளவு தான் பக்தியாயிருந்தாலும், எனக்குக் கவலையில்லை. நீங்கள் இரத்தத்தினால் மூடப்படவில்லையென்றால் நீங்கள் இழக்கப் பட்டிருக்கிறீர்கள். நாம் நாளை மறுநாள் இரவு அதற்குள்ளாகச் சென்று, அது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைக் காண்பிக்கவுள்ளோம். ஆனால் இரத்தம் இல்லாவிடில் நீங்கள் இழக்கப்படுவீர்கள். 78. இப்பொழுது, அதன் பின்னர் அவர் அந்த மனைவியை உண்டாக்கினபோது, அவள் ஒரு தோழியாயிருந்தாள். அது அவனுக்காக நேசிக்கும்படியான ஏதோ ஒரு காரியமாயிருந்தது. அது அவனுடையப் பாகமாயிருந்தது. 79. இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள். ஒரு புருஷனோ அல்லது ஒரு ஸ்திரீயோ மறுபடியும் பிறந்தாலொழிய, அவர்கள் ஒருபோதும் பரலோகத்திற்குச் செல்லவே முடியாது. நீங்கள் அந்நிய பாஷைகளில் பேசியிருக்கிற காரணத்தினால் செல்ல முடியும் என்று நான் கூறவில்லை. நீங்கள் சத்தமிட்டிருக்கிற காரணத்தினால் செல்லமுடியும் என்று நான் கூறவில்லை, நீங்கள் நடனமாடியிருக்கிறக் காரணத்தினால் செல்ல முடியும் என்று நான் கூறவில்லை. நீங்கள் சபைக்கு சென்றிருக்கிற காரணத்தினால், ஒழுங்காக சென்று வந்துள்ள காரணத்தினால், உங்களுடைய விசுவாசமுள்ள ஒழுங்கான செயல்பாட்டினிமித்தமாகச் செல்லமுடியும் என்று நான் கூறவில்லை. அந்தக் காரியங்களெல்லாம் சரிதான். ஆனால் இதுவோ அதுவல்ல. நீங்களும் கிறிஸ்துவும் ஒன்றாகுமளவிற்கு உங்களுக்கிடையே ஒரு முற்றிலுமான ஐக்கியத் தொடர்பு உண்டாயிருக்க வேண்டும். அப்பொழுதே நீங்கள் ஒன்றாயிருக்கிறீர்கள். நீங்கள் அவ்வாறில்லையென்றால் எப்படி ...... 80. இரவு நேரத்தில் நீங்கள் களைப்புற்று, சோர்வுற்று, சலிப்புற்று வீட்டிற்குள்ளே வருவதை யூகித்துப் பார்க்க முடிகிறதா? நீங்கள் ஒரு விவசாயியாகவோ, இயந்திரம் பழுது பார்க்கும் பணியை செய்பவனாகவோ, பிரசங்கியாகவோ அல்லது நீங்கள் யாராகவோயிருந்து உள்ளே வருவீர்களேயானால், நீங்கள் உங்களுடைய சிறிய வீட்டிற்குள்ளாக வரும்போது, நீங்கள் அங்கு சென்றடையும் வரை நீங்கள் மிகுந்த ஆவல் கொண்டிருப்பீர்கள். அப்பொழுது நீங்கள் வாசலைத் திறக்க அங்கே உங்களுடைய இனிமையான மனைவி நின்று உங்களை வாழ்த்துகிறாள். அவள் முழுமையான அழகுடையவளாகவும், சுத்தமுடையவளா யுமிருக்கிறாள். அப்பொழுது அவள் நடந்து வந்து உங்களைக் கன்னத்தில் முத்தமிடுகிறாள். பின்னர் அவள், ''தந்தையே, நீர் களைப்புற்றிருக்கிறீர்" என்பாள். அதன்பின்னர் அவள் உங்களை ஒரு நாற்காலியில் அமரச்செய்து, அவளும் உங்களுடைய மடிமீது அமர்ந்து, தன்னுடைய கரங்களை உங்கள் மீது போட்டுக்கொண்டு உங்களை தட்டிக் கொடுக்கிறாள். அப்பொழுது நீங்கள் களைப்புற்றிராததுபோலவே அது தென்படுகிறது. ஏனென்றால் ஏதோ காரியம் உங்களுடைய சுமையை மேலே தூக்கி இலகுவாக்குகிறது. அது அந்த நோக்கத்திற்காகவே தேவன் உங்களுக்கு அளித்த ஒரு காரியமாய் உள்ளது. இப்பொழுது அவள் ஒரு உண்மையான மனைவியாயிருப்பாளேயானால், அப்பொழுது அது உங்களுடைய ஒரு பாகமாக உள்ளது. 81. ஆனால் அந்த உதடுகள் அந்நாளிலோ அல்லது மற்ற ஏதோ ஒரு நாளிலோ வேறொரு மனிதனை முத்தமிட்டிருந்தால் என்னவாயிருக்கும்? உனக்கு அதைக் குறித்த உணர்வு இருக்குமாயின் என்னவாயிருக்கும்? அந்தக் கரங்கள் வேறொரு மனிதனை அணைத்துத் தழுவியிருந்தால் என்னவாயிருக்கும்? அப்பொழுது அவள் உன்னுடைய மடியின் மீது முற்றிலும் அருவருப்பானவளாயிருக்கிறாள். அப்பொழுது அந்த முத்தம் ஒரு யூதாஸின் முத்தத்தைப் போல எரிகிறது. அந்தக் கரங்கள், நீங்கள் சரியாகக் கூறினால், அவைகள் உங்கள் மேலிராமலிருந்தால் நலமாயிருக்கும். ஓ, அவள் முற்றிலும் அழகுடையவளாயிருக்கலாம். அவளுடைய தலைமுடி, சுருள் சுருளாக இருக்கலாம். அவளுடைய கண்கள் பழுப்பு நிறமாக இருக்கலாம், அவளுடையக் கன்னங்கள் ரோஜா நிறமாக இருக்கலாம். அவளுடையச் சிறிய அரைப்பாவாடைச் சலவைப்பெட்டியினால் ஒழுங்காகத் தேய்க்கப்பட்டிருக்கலாம். அவள் மிகவும் அழகாகக் காணப்படலாம். ஆனால் அந்த உண்மையான அசலான தேவ பக்திக்குரிய மரியாதையும், அன்பும், உறுதியான நம்பிக்கையும் அங்கு இல்லையென்றால், அவள் உன்னுடைய மடியிலிருந்து விலகியிருப்பதே மேலானதாயிருக்கும். அப்பொழுது நீ அவளோடு எந்தக் காரியத்தையும் செய்ய விரும்பமாட்டாய். அவள் - அவள் உனக்கு ஒரு தீங்காகவே காணப்படுகிறாள். அவள் தன்னை எவ்வளவு அழகுள்ளவளாக்கிக் கொள்கிறாள் என்று நான் கவலைப்படுகிறதில்லை. ஆனால் அவள் ஒரு உண்மையான, அசலான, இனிய இருதயமுடையவளாய், உன்னைத் தவிர வேறு எவரையும் நேசியாமல், உன்னைத் தவிர வேறு எவருக்கும் தன்னுடைய உதடுகளிலிருந்து முத்தமிடாமல், உன்னைத் தவிர வேறெவருடைய கரங்களும் அவளை ஆதரித்தணைக்க வேண்டாம் என்று நிரூபிக்கப்படும் வரையில் அவள் இன்னமும் தவறாகவே இருக்கிறாள். நீ அதை அறிவாய். என்னே ஒரு உணர்வு! என்னே ஒரு ஆறுதல்! 82, அது கணவனும் மனைவியுமாயிருக்கிறது. அதுவே கிறிஸ்துவுக்கும் அவருடையச் சபைக்கும் மாதிரியாக உள்ளது. நீங்கள் உங்களுடைய சபைக்குச் செல்லும்போது, நீங்கள் நகரத்தி லேயே மிகச் சிறந்த சாய்வான சபை இருக்கைகளை உடையவர் களாயிருக்கலாம். நீங்கள் நகரத்திலேயே மிக உயரமான கோபுரத்தை அங்கே உடையவர்களாயிருக்கலாம். நீங்கள் மிகச் சிறந்த இசைக்கருவியை உடையவர்களாயிருக்கலாம். நீங்கள் மிகச் சிறந்த ஆடை அணியலாம். நீங்கள் பிற பறவைகளைப் போல ஒலியெழுப்பும் அமெரிக்க பாடும் பறவையைப் போல பாடலாம். ஆனால் அவையாவுமிருந்தும், நீங்கள் உலகத்தோடு முத்தமிட்டுக் கொண்டும், சரசமாடிக்கொண்டுமிருந்தால், அது கிறிஸ்துவின் கன்னங்களில் முத்தமிடுகின்ற ஒரு யூதாஸ்காரியோத்தின் முத்தமாகவே இருக்கிறது. அப்பொழுது அவர் உங்களோடு எந்தக் காரியத்தையுமே செய்ய விரும்புகிறதில்லை. அவர் உங்களுடைய விவாக நிச்சய மோதிரத்தையே நோக்கிப் பார்க்கிறார். அவர் அந்தத் தலைமாலை நிலைமாறியிருப்பதையே கண்டறிகிறார். அவர் அன்பானது ஒழிந்து போய் விட்டதைக் கண்டறிகிறார். அது ஒரு வேஷமாயிருக்கிறது. எனவே அவர் விசுவாசப் பற்றுறுதி அற்றுப்போனதைக் கண்டறிகிறார். நீங்கள் உலகத்தோடு வேசித்தனம் செய்திருக்கிறீர்கள். நீங்கள் நடனங்களுக்குச் சென்று இசைப்பேழையில் ஆரவார இசைப்புச் சந்த நிகழ்ச்சிக்குச் சென்று, கீழ்த்தரமான இழிவான தொலைக் காட்சி நிகழ்ச்சிகளை உன்னிப்பாக கவனிக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்துவை உங்களுடைய கணவன் என்று அழைத்துக் கொண்டே, அவர்பேரில், அவருக்கு எதிராக விபச்சாரம் செய்து கொண்டிருக்கிறீர்கள். 83. வேதமோ, "நான் ஐசுவரியவானென்றும், எனக்கு ஒரு குறைவுமில்லை யென்றும் நீ சொல்லுகிறாய்'' என்றே உரைத்துள்ளது. ஆனால் அவரோ, "நீ நிர்வாணமாயிருக்கிறதையும், பரிதபிக்கப்படதக்கவனாய், குருடனாய், தரித்திரனாய் இருக்கிறாய் என்பதை அறியாதிருக்கிறாய்" என்றே கூறியுள்ளார். இது நாம் ஒரு விளக்கைக் கொளுத்தி வீட்டை துடைத்து சுத்தம் செய்ய வேண்டிய நேரமாயுள்ளது, கர்த்தருடைய வருகைச் சமீபமாயுள்ளது. 84. நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், ஒருசில நிமிடங்கள் அதைக் குறித்து சிந்திப்போமாக. நீங்கள் சிந்திப்பீர்களா? சகோதரியே நீங்கள் இசைப்பேழையை இயக்குவீர்களா? 85. சபையே, நீ என்ன செய்து கொண்டு வந்திருக்கிறாய்? இன்றிரவு உங்களுடைய நிலைமைகள் என்ன? உங்களுடைய கரங்கள் உங்களுடைய பக்தியோடு மேலே உயர்த்தப்பட்டிருக்கும் போது, ஏதோ காரியம் உங்களிடத்தில் சோதித்தறியப்படு கின்றதா? நீங்கள் உலகத்தோடு சரசமாடிக் கொண்டிருப்பீர்களேயானால், நீங்கள் தவறாயிருக்கிற காரியங்களைச் செய்து கொண்டிருப் பீர்களேயானால், நீங்கள் முத்தமிட்டால் ..... 86. மனிதனே, அதைக் குறித்து சிந்தித்துப்பார். திருவாளரே, நான் உங்களை ஒரு காரியம் கேட்க விரும்புகிறேன். இது விவாகமாகாத குமாரி மற்றும் திருமதிகளுக்காகவும்கூட ... சம்பந்தமுடையதாகவே இருக்கிறது. வாலிபப் பெண்மணியே, உனக்கு நிச்சயிக்கப் பட்டிருந்த உன்னுடைய ஆண் சிநேகிதன், வெளியே மற்ற பெண்பிள்ளைகளோடு சென்றதையும், முத்தமிட்ட தையும் நீ கண்டு அதைக் குறித்து நன்கு அறிந்திருப்பாயானால், அப்பொழுது அவனைக் குறித்து நீ என்ன நினைப்பாய்? அவன் மீண்டும் வந்து, உன்னை கரத்தால் தட்டிக்கொடுத்து, "அன்பே, நான் உன்னை மட்டுமே நேசிக்கிறேன்" என்று கூறினால் உனக்கு எப்படியிருக்கும்? அப்பொழுது நீ, ''அற்ப மாய்மாலக்காரனாகிய நீ என்னுடைய பார்வையிலேயே தென்படாதே' என்று கூறிவிடுவாயே! 87. திருவாளரே, அதைக் குறித்து என்னவென்பதை சிந்தித்துப் பார். நாம் நிச்சயிக்கப்பட்டவர்களாய் மாத்திரமல்லாமல், திருமணமே செய்துகொண்டவர்களாகவே இருக்கிறோம். சபையோ கிறிஸ்துவைத் திருமணம் செய்து கொண்டது. நாம் கிறிஸ்துவின் மனைவியாய், பிள்ளைகளைப் பிறப்பிக்க வேண்டிய வர்களாய் இருக்கிறோம். உன்னுடைய பக்தியான மனைவி, அவள் அநேகப் பிள்ளைகளைப் பெற்றவளாயிருந்து, நீ வரும் அந்நாளில்..... நீ வீட்டிற்கு வரும்போது, அவள் உள்ளே நுழையும்போது, ஓ, அவளுடைய விரல் நகங்கள் வண்ணந்தீட்டப் பட்டிருந்தால், நீ எப்படி அதை விரும்புவாய்? (நீ உலகப் பிரகார மானவனாயிருந்தால், அதை விரும்புவாய்). நீ ஒருக்கால் .... அவள் எப்போதும் இருந்ததிலேயே மிகவும் அழகாக காணப்படலாம், ஆனால் உனக்குத் தெரியும். சகோதரனே அந்த ஸ்திரீ வேறொரு மனிதனை முத்தமிட்டுக் கொண்டிருந்தால் எப்படியிருக்கும் என்று அதைக் குறித்து சிந்தித்துப்பார். உன் மீது கரங்களைப் போட்டிருக்கும் அவள் உன்னை நேசிக்கிறேன் என்று உன்னிடம் கூறினால், அப்பொழுது ......... அவள் மற்றவர் களையும்கூட நேசிக்கிறாள். அவளுடைய அன்பு உண்மையான தல்ல என்பதை நீ அறிந்து கொள்வாய். அவளுடைய அன்பு உண்மையானதல்ல, அது உன்னைச் சார்ந்ததல்ல. அது மற்றவர் களையும்கூட சார்ந்ததாகவே உள்ளது. எந்த மனிதனாவது அவளிடத்தில் தொடர்பு கொண்டிருந்தால், அப்பொழுது நீ அவளை உன்னுடைய மடியிலிருந்து துரிதமாக விலக்கிவிடுவாய். அது என்ன ஒரு உணர்வாயிருக்கும் என்பதைக் குறித்து சிந்தித்துப்பார். பெண் மணியே, உன்னுடைய கணவன் அப்படிப்பட்டவனாயிருந்து வீட்டிற்கு வருவானேயானால் எப்படியிருக்கும் என்று அதைக் குறித்து சிந்தித்துப் பார். அது மட்டுமின்றி அவன் ஒழுக்கக் கேடான செயல்களின் வியாதிகளையே சுமந்து கொண்டு வருகிறான். 88. ஓ, உங்களுடைய இருதயம் ஆசீர்வதிக்கப்படுவதாக. சபையானது ஆவிக்குரிய ஒழுக்கக்கேட்டினால் உண்டாகும் பால்வினை நோய்களோடு, எல்லாவிதமான கொள்கைகளையும் மற்ற எல்லாவற்றையும் புசித்துக் கொண்டிருக்கிறது. அது தவறாயிற்றே! தேவனே, இரக்கமாயிரும். நண்பர்களே, இயேசு வருகிறார். இந்நாட்களில் ஒன்றில் அல்லது இந்நாட்களிலுள்ள இரவுகளில் ஒன்றில் நீங்கள் சோதித்தறியும்படியான நேரம் இருக்கப்போவதில்லை. நீங்கள் இப்பொழுது சோதித்தறிந்து கொள்வது மேலானதாகும். நாம் ஜெபம் செய்வோமாக: 89. உங்களில் எத்தனைப் பேர் உங்கள் தலைகள் வணங்கியிருப்பதுடன், உங்கள் கரங்கள் உயர்த்தப்பட்டிருக்க, ''சகோதரன் பிரான்ஹாம் உங்களுடைய ஜெபத்தில் என்னை நினைவுகூருங்கள். சகோதரன் பிரான்ஹாம், நான் இன்றிரவே வருகிறேன், நான் இந்தக் காரியங்களை ... பேசுவதற்கு இங்கு வரவில்லை" என்று கூறுகிறீர்கள்? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. கரங்களைப் பாருங்கள். நான் காணப்ப வேண்டும் என்று இங்கு வரவில்லை, நான் ஏதோ ஒன்றைக் கண்டறியும்படியாகவே வந்துள்ளேன். நீர் பிரசங்கித்துக் கொண்டிருக்கும்போதே தேவன் என்னுடைய இருதயத்தில் பேசினார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் தவறாயிருக் கிறேன் என்பதை நான் உணருகிறேன். நான் - நான் ஒரு உண்மையான, விசுவாசமுள்ளக் கிறிஸ்தவனாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். நான் உண்மையாகவே நேசிப் பவனாகயிருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அதாவது நான் என்னுடைய ஆண்டவரண்டை செல்லும்போது, என்னுடைய முழங்கால்களை முடக்கி மண்டியிட்டு, "ஓ, என் நேசரே" என்று கூற, அவர் தம்முடைய கரங்களில் என்னைத் தழுவ வேண்டுமென்று நான் விரும்புகிறேன். 90. அதைக் குறித்து சாலமோன் எப்படிப் பேசினான் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? அவன், "வா, என் பிரியமே, நாம் மாதுளம்பழ தோட்டத்தினூடாக நடந்து செல்வோம். நாம் சுகந்தப்பிசின்களின் தோட்டத்தினூடாக நடந்து செல்வோம்'' என்றான். அவளுடைய உதடுகள் ரோஜா மொட்டுகளைப் போல் காணப்பட்டது என்று எப்படியாக அவன் கூறியுள்ளான். அவன் எப்படியாகத் தான் நேசித்த தன்னுடைய மனைவியை, "வா, நாம் போய், இன்பங்களினால் பூரிப்போம்" என்று கூறினான். 91. நீங்கள் உங்களுடையப் பீடத்தண்டை முழங்காற்படி யிட்டு ஜெபிக்கும்போது, உங்களுடைய இருதயம் அவ்வளவு உண்மையாயும், உங்களுடைய ஆத்துமா அவ்வளவு தூய்மை யாக்கப்பட்டதுமாயிருந்து, "தேவனாகிய கர்த்தாவே, இன்பங்களி னால் பூரிப்போம்" என்று கூறி, "ஆம், என் நேசரே, நான் உம்மை நேசிக்கிறேன்" என்று நீங்கள் கூறுவீர்களா? அல்லது நீங்கள் வேசித்தனம் பண்ணிக்கொண்டிருக்கிறீர்களா? நீங்கள் உலகத்தோடு சரசமாடிக்கொண்டிருக்கிறீர்களா? 92. கர்த்தருடைய வேளைச் சமீபமாயிருக்கிறது. இந்த எல்லா அடையாளங்களும், அற்புதங்களும் சம்பவித்துள்ள இலட்சக் கணக்கான மற்றக் காரியங்களுடன் காணும்போது, ஒவ்வொரு அடையாளமும் அதையே சுட்டிக்காண்பிக்கிறது. இது இருளாகிக் கொண்டேயிருக்கிறது. ஒரு குளிர்ந்த நிலை சபையில் காணப்படுகிறது. எழுப்புதலோ முடிந்துவிட்டது போன்றுத் தென்படுகிறது. கடைசியாக குறுகிய நேரத்தில் கூறும் கூற்று ஏறக்குறைய முடிந்து போயிற்று. நாம்தாமே இங்கே விபச்சாரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளோம். அவர் என்ன செய்வார்? அவர் நம்மை அவருடைய மடியிலிருந்து தள்ளி, "அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள்" என்பார். 93. இப்பொழுது இங்கு எவரேனும் மீண்டும் நினைவுகூரப் பட வேண்டும் என்று விரும்பினால், உங்களுடைய கரங்களைத் தேவனண்டை உயர்த்தி, ''நான் இப்பொழுதே ஒப்புவிக்கிறேன் என்றும் கூறி, தேவனுடைய கிருபையினால் இன்றிரவு முதற் கொண்டு தேவனுடைய ஒத்தாசையினால் நான் ஒரு உண்மை யான ஜீவியம் ஜீவிப்பேன்" என்று கூறும்படிக்கு இந்த நிமிடத் தில் உங்களைக் கேட்கிறேன். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சகோதரனே உங்களைத்தான், சகோதரியே உங்களைத் தான், வாலிபப் பெண்மணி யே உங்களைத்தான், ஐயா உங்களைத்தான், சகோதரனே உங்களைத்தான், இங்கே உள்ள உங்களை, அங்கே கீழே உள்ள உங்களை, வாலிப மனிதனே உங்களைத்தான், தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. 94. இங்கு இரட்சிக்கப்படாமல் இருக்கிற ஒரு நபர், ''சகோதரன் பிரான்ஹாம், என்னை நினைவுகூருங்கள், நான் மறுபடியும் பிறக்கவேயில்லை. நான் மறுபடியும் பிறக்கவில்லை என்பதை நான் அறிவேன்" என்று கூறுவீர்களா? கவனியுங்கள், நீங்கள் மறுபடியும் பிறக்கும் வரையில் நீங்கள் இரட்சிக்கப்படவே யில்லை. நீங்கள் வெறுமனே ஏதோ ஒரு காரியத்தை நோக்கியவாறே உங்களுடைய முகத்தைத் திருப்பினீர்கள். ஆனால் நீங்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது நீங்கள் மறுபடியும் பிறக்கின்றீர்கள். நீங்கள், ''சகோதரன் பிரான்ஹாம், நான் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவேயில்லை. நான் தவறாயிருக்கிறேன் என்பதை நான் அறிவேன். நான் இப் பொழுதே என்னுடையக் கரங்களை உயர்த்தி, 'நீர் என்னையும் கூட நினைவுகூரும்" என்று கூறுங்கள். நான் ஒரு போதும் இரட்சிக்கப்படவேயில்லை. நான் ஒரு போதும் கிறிஸ்துவைச் சேவிக்க முயற்சித்ததேயில்லை. ஆனால் நான் அதைச் செய்ய முயற்சிக்கும்படிக்கு விரும்புகிறேன். சகோதரன் பிரான்ஹாம் எனக்காக ஜெபியுங்கள் என்று கூறுங்கள். இப்பொழுது இங்கு எவரேனும் இருந்தால் உங்களுடைய கரத்தை நீங்கள் உயர்த்துவீர்களா? ஒருபோதும் கிறிஸ்தவராயிராத ஒரு நபர் இங்கிருந்தால், உங்களுடைய கரத்தை உயர்த்தி, "சகோதரனே, ஜெபத்தில் என்னை நினைவுகூருங்கள்" என்று கூறுவீர்களா? மகனே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. வேறு எவரேனும், "சகோதரனே, என்னை நினைவு கூறுங்கள்" என்று கூறுவீர்களா? பெண்மணியே, தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வேறு எவரேனும், ''சகோதரனே, என்னை நினைவு கூருங்கள், நான் இப்பொழுது கர்த்தராகிய இயேசுவை விசுவாசித்து, அவரை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்ள விரும்புகிறேன்" என்று கூறுவீர்களா? சகோதரனே, தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது நன்றாகவுள்ளது. 95. அன்றொரு நாள் யாரோ ஒருவர் என்னை விமர்சனம் செய்து சகோதரன் பிரான்ஹாம், " நீர் ஏன் உன்னுடைய கரத்தை என்று கூறுகிறீர்?" என்று கேட்டார். கவனியுங்கள். என்னைத் தவிர வேறு எவருமே பீட அழைப்பில் விசுவாசங் கொண்டிருக்கவில்லை. பீடத்தண்டை வருவதில் நான் விசுவாசங் கொண்டுள்ளேன். அது நல்லது. ஆனால் அது உங்களை இரட்சிக்கிற தில்லை. இது உங்களுடையக் கருத்தாய், கிறிஸ்துவைக் குறித்த உங்களுடையத் தீர்மானமாயிருக்கிறது. நீங்கள், ''நல்லது, நான் பீடத்தண்டையில் நடந்து சென்றிருந்தால் நலமாயிருந்திருக்கும்" என்று கூறுகிறீர்கள். அது நல்லதுதான். ஆனால் சகோதரனே, நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்தினபோது, நீங்கள் ஒவ்வொரு விஞ்ஞான விதியையும் மீறிவிட்டீர்கள் என்பதை நீங்கள் உணர்ந்தீர்களா? இயற்கையாகவே உங்களுடையக் கரமானது புவிஈர்ப்பு சக்தியினால் கீழே தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்துவீர்களே யானால், அது உங்களுடையச் சிருஷ்டிகரை நோக்கி உங்க ளுடையக் கரத்தை உயர்த்தும்படியாக உங்களுக்குள் இருக்கும் இயற்கைக்கு மேம்பட்ட ஒன்றே இயற்கையின் விதிகளை மீறக்கூடியதாயிருக்கிறதென்றும், உங்களுடைய இருதயத்திற்குள் ளிருக்கும் ஏதோ ஒன்றே ஒரு தீர்மானம் செய்தது என்பதையே அது காண்பிக்கிறது. தேவன் உங்களை பீடத்தண்டை காண்கிற விதமாகவே நீங்கள் உங்களுடையக் கரங்களை உயர்த்துகிறதை யும் அவர் காண்கிறார். அது முற்றிலும் உண்மையே. நீங்கள் அதை மனதில் கொண்டிருப்பீர்களேயானால், அப்பொழுது தேவனும்கூட அதை மனதில் கொண்டிருக்கிறார். ஆனால் பாருங்கள், நண்பனே, நீங்கள் பாதி வழியில் இருக்க முடியாது. நீங்கள் அதை மனதில் கொண்டிருக்க வேண்டும். இப்பொழுது நாம் ஜெபம் செய்வோம். 96. ஸ்தோத்தரிக்கப்பட்டப் பரலோகப் பிதாவே, இன்றிரவு இந்த எழுப்புதலின் துவக்கத்தில் எங்களுடைய நேரமானது சற்று கடந்துவிட்டுள்ளபடியால், இந்த ஜனங்களண்டை நீர் இரக்கமா யிருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். சர்வவல்லமை யுள்ள தேவனே அதை ......... அருளும். இங்கே இன்றிரவு இந்தக் கட்டிடத்தில் குறைந்தது இருபது கரங்கள் உயர்த்தப் பட்டன. அதாவது அவர்களுக்குக் கிறிஸ்து தேவைப்பட்டது. ஓ, தேவனே இவை அவர்களுடைய ஆத்துமாக்களாய் உள்ளன. ஆவியாகிய எண்ணெயானது ஏறக்குறைய எரிந்து போய் விட்டது. இனி அதிகம் இருக்காது. குடுவையிலிருந்தோ அல்லது எண்ணெய் குப்பியிலிருந்தோ கடைசி துளியானது செலவழிந்து போனவுடனே விளக்குகளில் ஊற்ற எண்ணெயே ஒருபோதும் இருக்காது. அப்பொழுது அவர்கள் கடைசி நாளில் இருக்கிறார்கள் என்பதை அவர்கள் உணருவார்கள். பூமியில் கிறிஸ்துவைத் தவிர வேறொரு நம்பிக்கையே எங்களுக்கு இல்லை. கர்த்தாவே தங்களுடைய கரங்களை உயர்த்தினவர்களுக்கு நீர் இப்பொழுதே எப்படியாவது பரிசுத்த ஆவியை அனுப்ப வேண்டும் என்றும், பாவத்தின் ஜீவியத்திலிருந்து அவர்களை இரட்சிக்க வேண்டும் என்றும் இந்தப் பயபக்தியான நேரத்தில் பய பக்திக்குரிய உணர்வோடு இன்றிரவு நான் ஜெபிக்கிறேன். இதை அருளும் பிதாவே. 97. இந்தக் கூட்டம் முடிவுறும் முன்னே, சரியாக அவர்களில் பன்னிரண்டிற்கும் அதிகமான எண்ணிக்கைக் கொண்டவர்கள் பரிசுத்த ஆவியினால் சத்தமிடலாம். இந்த ஞானஸ்நானத் தொட்டியில் நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் விலையேறப்பெற்ற நாமத்தில் ஒருவர் பின் ஒருவராக ஈஸ்டர் காலையில் புதிதான ஜீவனுடையவர்களாய் எழுந்திருக்கும்படி ஞானஸ்நானம் பண்ணப்படுவார்களாக. ஒ, ஸ்தோத்தரிக்கப்பட்ட நித்தியப் பிதாவே, நீர் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். கர்த்தாவே இதை அருளும். இப்பொழுதே இந்த நொடிப்பொழுதிலிருந்து அவர்களுடைய தீர்மானம் உண்மையாயிருப்பதாக. அவர்கள் அமர்ந்து கொண்டிருக்கிற இடத்திலிருந்தே அவர்கள் உம்மை ஏற்றுக்கொள்வார்களாக. எங்களுடைய பீடங்கள் சுற்றிலும் ஜனங்களால் நிரப்பப் பட்டிருக்கையில், நீர் இந்த ஜனங்களை இன்றிரவே உம்முடைய ஊழியக்காரர்களாகும்படி செய்ய வேண்டும் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். கிறிஸ்துவினுடைய நாமத்தில். 98. நாம் நம்முடைய தலைகளை வணங்கியிருக்கையில், நான் உங்களை ஒரு பயபக்தியான கேள்விக் கேட்க விரும்புகிறேன். உங்களுடையக் கரத்தை உயர்த்தின நீங்கள், ஜெபித்துக் கொண்டிருந்த நீங்கள், உங்களுடையக் கரமானது மேலே உயர்த்தப்படுவதை காணும்படியாக நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்தவில்லையென்பதை நான் அறிவேன். ஏதோ ஒன்று உங்களிடத்தில் கூறின் காரணத்தினால் நீங்கள் அதை உயர்த்தினீர்கள். மேலே உயர்த்தப்பட்ட கரத்தை உடைய நீங்கள், ''சகோதரன் பிரான்ஹாம், நான் தேவனுக்கு முன்பாகவும், இந்த ஜனக்கூட்டத்திற்கு முன்பாகவும் நான் விசுவாசிக்கிறேன். ஏதோ காரியம் இன்றிரவு என் இருதயத்தில் சம்பவித்துள்ளது என்று நான் விசுவாசிக்கிறேன். எனவே இன்றிரவு முதற்கொண்டே நான் ஒரு வித்தியாசமான நபராயிருக்கப் போகிறேன்" என்று கூறுங்கள். நீங்கள் உங்களுடையக் கரத்தை உயர்த்துவீர்களா? உங்களுடையக் கரத்தை உயர்த்தின நீங்கள், ''நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறுவீர்களா? பெண்மணியே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்களை, உங்களை, உங்களை, உங்களை ஆம், கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. 99. யாராவது உங்களுடைய கரத்தை உயர்த்தி, "நான் இப்பொழுதே விசுவாசிக்கிறேன்" என்று கூறுவீர்களா? சகோதரனே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ''கர்த்தர் இன்றிரவு என்னிடத்தில் சொல்லுகிறார்" ..... அங்கே பின்னாக உள்ள பெண்மணியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. ''இப்பொழுதே ஏதோ காரியம் என்னுடைய இருதயத்தில் சம்பவித்திருக்கிறது என்று கர்த்தர் என்னிடம் சொல்லுகிறார். நான் என்னுடைய ஜீவியத்தில் எப்போதும் இருந்ததைக் காட்டிலும், இந்த எழுப்புதலிலிருந்து வெளியே போய் அதிக சந்தோஷமுடையவனாயிருக்கப் போகிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன்." தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சரி, இங்கு அமர்ந்துள்ள பெண்மணியே தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இது உங்களுடைய கரத்தையும் கூட உங்களுக்காக உயர்த்தும்படியான நேரமாக இருந்தது என்பதை நான் எண்ணிப்பார்த்தேன். வேறு எவரேனும், ''சகோதரன் பிரான்ஹாம் நான் வித்தியாசமாக உணருகிறேன். நான் சீக்கிரத்தில் கிறிஸ்துவின் பிரசன்னமாகுதலைக் குறித்த ஒரு உணர்வோடு இன்றிரவு இந்தச் சபையிலிருந்து நான் வெளியே சென்று கொண்டிருக்கிறேன் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் ஒரு வித்தியாசமான ஜீவியம் ஜீவிக்கும்படியாக இங்கிருந்து வெளியே போய்க்கொண்டிருக்கிறேன். தேவனுடைய கிருபை யினால் நான் ஒரு கிறிஸ்தவனாக இருக்கப்போகிறேன். தேவன் என்னை அழைத்திருக்கிறார் என்று நான் விசுவாசிக்கிறேன்" என்று கூறுகிறவர்கள் இருக்கிறீர்களா? 100. அவர். உங்களை அழைத்திருப்பாரேயானால், நீங்கள் அவருடையவராயிருக்கிறீர்கள். சரசமாடுவதை விட்டு விடுங்கள். உலகத்தோடு சரசமாடுவதை விட்டு விடுங்கள். இப்பொழுதே அவருக்காக ஜீவிக்க வாருங்கள். நீங்கள், ''நான் என்னுடைய எல்லாப் பாவத்திலிருந்தும் மனந்திரும்பி, இப்பொழுதே நான் கிறிஸ்துவை என்னுடைய இரட்சகராக ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறுங்கள். முடிப்பதற்கு முன்னர் வேறெவரேனும் இருப்பீர்களா? அங்கே இருக்கிறார்களா? சகோதரனே தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது நன்றாயுள்ளது. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அது நன்றாயுள்ளது. நீங்கள் அதைச் செய்ய காண்கிறதற்காக மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சரி. 101. இப்பொழுது இது ஒரு ஆரம்பநாள் இரவாயிருக்கிறபடியால், இது ஒரு சிறு .......... நாங்கள் உங்களை அதிக கட்டாயத்தோடுப் பிடித்து வைத்திருக்க விரும்பவில்லை. நீங்கள் நாளை இரவு திரும்பவும் வரும்படிக்கு நாங்கள் உங்களை சீக்கிரமாக அனுப்ப விரும்புகிறோம். 102. நாம் முடிப்பதற்கு சற்று முன்னர், உங்களுடையக் கரத்தை உயர்த்தி, ''சகோதரன் பிரான்ஹாம் எனக்காக ஜெபிப்பீர்களா"? என்று கூறுகிற சுகவீனமான நபர் எவரேனும் உள்ளரா? சரி, அது ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, ஒன்பது, பத்து கரங்கள் உள்ளன. பதினொன்று, பன்னிரண்டு, சரி இப்பொழுது பதின்மூன்று, பதினான்கு சரி, பதினைந்து உள்ளன. இப்பொழுது நாம் தலைவணங்குவோமாக: 103. ஸ்தோத்தரிக்கப்பட்ட பரலோகப் பிதாவே, நீரே அந்தக் கரங்களைக் கண்டீர், ஒ, அவர்கள் இங்கே ஒரு நோக்கத்திற்காக இருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்தவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களுக்கு உம்முடைய மகத்தான ஒத்தாசை தேவைப்படுகிறது. கர்த்தாவே, நீர் தாவீதின் மூலமாக ''எங்களுடைய அக்கிரமங்களையெல்லாம் மன்னிக்கிற, எங்களுடைய நோய்களை யெல்லாம் குணமாக்குகிற அவருடைய உபகாரங்களையெல்லாம் மறவாதே" என்று கதறினீர் என்பதை நாங்கள் உணருகிறோம். கிறிஸ்துவின் இரத்தம் அவர்கள் மேல் விலையேறப்பெற்றதாய் தங்கியிருக்க வேண்டும் என்றும், அவர்கள் சுகமடைந்து, வருகின்ற இந்தக் கூட்டத்தைக் கண்டு மகிழ வேண்டுமென்றும் நான் ஜெபிக்கிறேன். இதை அருளும் கர்த்தாவே. நாங்கள் இதைக் கிறிஸ்துவினுடைய நாமத்தினூடாக வேண்டிக்கொள்கிறோம். ஆமென். 104. இப்பொழுது நாம் எழும்பி நிற்போமாக, "இயேசுவின் நாமத்தை உன்னுடன் கொண்டு செல்". ஓ, உன்னுடன் இயேசுவின் நாமத்தை...... பிள்ளையே .... (நாம் திரும்பி நமக்கு அருகில் உள்ள யாருடனாவது கரத்தைக் குலுக்குவோம். திரும்பிக் கரங்களைக் குலுக்குங்கள்) அது உனக்கு சந்தோஷத்தையும், ஆறுதலையும் அளிக்கும், இப்பொழுது நீ எங்கு சென்றாலும் அதைக் கொண்டு செல். விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்) ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமுமாமே. விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்) ஓ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமுமாமே. 105. நாம் இப்பொழுது அமைதியாக, நாம் இந்தப் பக்கமாக. நோக்கிப் பார்க்கையில் மென்மையாகப் பாடுவோமாக: இயேசுவின் நாமத்தில் சாஷ்டாங்கமாய், அவருடைய பாதத்தில் வீழ்ந்து பணிவோம். ஓ, நம்முடைய யாத்திரை முடிவுறும்போது, பரலோகத்தில் உள்ள இராஜாதி இராஜாவாகிய அவருக்கு நாம் முடிசூட்டுவோம். விலையேறப்பெற்ற நாமம் (அது ஆசீர்வதிக்கப்பட்டது), ஒ எவ்வளவு இனிமையானது! பூமியின் நம்பிக்கையும், பரலோகத்தின் சந்தோஷமுமாம்; விலையேறப்பெற்ற நாமம் (விலையேறப்பெற்ற நாமம்), ஓ எவ்வளவு இனிமையானது ! பூமியின் நம்பிக்கையும் பரலோகத்தின் சந்தோஷமுமாமே. 106. இப்பொழுது ஒன்பது மணி ஆகி சற்று நேரம் கடந்து விட்டது. ஒன்பது ஆகி சுமார் ஏழு அல்லது எட்டு நிமிடங்கள் கடந்து விட்டன. சீக்கிரமாக நீங்கள் வீட்டிற்குச் சென்று, நாளை இரவு மீண்டும் திரும்பி வாருங்கள். நாம் தேவனுடைய ஆசீர் வாதங்களைக் கண்டு மகிழ்வோம். உங்களுடைய பிரசன்னத்தையும் கண்டு மகிழ்வோம். இப்பொழுது சுமார் பன்னிரண்டு, பதினான்கு கரங்கள் சுகமளித்தலுக்காக இன்றிரவு உயர்த்தப் பட்டதை கவனித்தேன். இதில் ஏராளமான சுகவீனமுள்ள ஜனங்கள் பங்குபெறப் போவதாயிருந்தால், அப்பொழுது நாங்கள் ஒரு சுகமளிக்கும் ஆராதனைக்காக ஓர் இரவு அழைப்போம். அது சனிக்கிழமை இரவு மற்றும் ஞாயிற்றுகிழமையாகவும்கூட இருக்கலாம். நாம் ஞாயிறு முழுவதுமாக அவர்களைக் கவனிக்க முடியாது என்று நாம் கண்டால், அப்பொழுது நாம் ஒரு சனிக்கிழமை இரவே ஏற்பாடு செய்வோம். அது எப்படி வருகிறது என்று நாம் பார்ப்போம். 107. இப்பொழுது தேவனுடைய ஆசீர்வாதங்கள் உங்கள் ஒவ்வொருவர் மேலும் ஆழமாய் தங்கியிருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். நாம் நாளை இரவு மீண்டும் சந்திக்கும் வரை அவர் உங்களோடிருந்து உங்களை ஆசீர்வதிப்பாராக. 108. மேய்ப்பர் இங்கு மேலே வந்து ஜெபம் செய்து நம்மை அனுப்பி வைக்கும்படி நான் கேட்டுக் கொள்கையில், நாம் இப்பொழுது ஜெபத்திற்காக சற்று நேரம் நம்முடையத் தலைகளை சற்று தாழ்த்துவோமாக. 2